ராசி மண்டலத்தில் 11 வது ராசி. உங்களுக்கு தடித்த கழுத்து இருக்கும். சுயமரியாதைக்கு நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருபவர். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து, உங்களுக்கு எதிர்ப்பு இருக்கும். உங்கள் தலை வழுக்கையாக இருக்கலாம் அல்லது கேசம், மிகவும் குறைவாக இருக்கலாம். உங்கள் குழந்தைப் பருவத்தில் உங்களுக்கு, சில துரதிருஷ்டங்களும் துன்பங்களும் இருந்திருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில், நீங்கள் மகிழ்ச்சி காண்பீர்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு செல்வச் செழிப்பும், சொத்துக்கள் வசதியும் கிடைக்கும். உங்கள் சகோதரர்களின் கெட்ட சகவாசம் உங்களை பாதிக்கும். 24, 25 வயதில், நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள். நீங்கள் ஒரு தத்துவஞானி எந்த ஒரு விஷயத்தையும், துருவிப்பார்த்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர். நீங்கள் அமைதி விரும்புபவர் நன்கு படித்தவர். நீங்கள் பல விஷயங்களைப் பற்றியும், சதா சிந்தித்துக்கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிட விரும்புகிறீர்கள். கூரிய நினைவாற்றல் கொண்ட நீங்கள், உங்கள் எண்ணங்களில் விரைவாகச் செயல்படுகிறீர்கள். நீங்கள் ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர் வாழ்க்கையில் பல ஏற்றதாழ்வுகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். உயரமாக இருக்கும் நீங்கள், நல்ல கவர்ச்சியான, கம்பீரமான தோற்றமுடையவர். உங்களுக்கு பல கஷ்டங்கள் இருந்தாலும், நீங்கள் அச்சமின்றி செயல்படுபவர். நீங்கள் சமயோசிதமாக செயல்படக் கூடியவர் அரசியலில் ஆர்வம் கொள்வீர்கள். பொது நிறுவனங்களிலும், நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். விளையாட்டுத் துறையில், உங்களுக்கு விருப்பம் இருக்கும். வலுவான உடற்கட்டையுடைய நீங்கள், மிகவும் தாராள சிந்தை கொண்டவர். நீங்கள், நிலபுலன்களுக்கு சொந்தமாக இருப்பதுடன், மிகுந்த கவனமாகவும் பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் எண்ணங்களிலும் செயல்களிலும், நீங்கள் மிகுந்த உறுதியுடன் இருப்பவர். நீங்கள், பலதரப்பட்ட விருந்துகளுக்கும், கிளப்புகளுக்கும் போய்வர விரும்புகிறீர்கள் அதன் விளைவாய் உங்களுக்கு அவப் பெயரும் ஏற்படும். உங்கள் உணர்ச்சிகளையோ, காதலையோ நீங்கள் வெளிப்படையாக, எடுத்துக்காட்டுவதில்லை. நீங்கள் மிகவும் தந்திரம்மிக்க சாமர்த்தியசாலி. நன்கு படித்த, புத்திசாலியான ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்ளவே நீங்கள் விரும்புகிறீர்கள்
Friday, 25 April 2014
மகர லக்னம்,,,,!
நீங்கள் மகர லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் உள்ள பத்தாவது ராசி அது.
உங்களுக்கு பயணம் செய்வதில் நல்ல ஆசை இருக்கும் கவர்ச்சியான கண்களை உடைய நீங்கள், மிகவும் தந்திரமானவர் சாமர்த்தியசாலி புத்திசாலி. சில நேரங்களில், கொஞ்சம் சோம்பேறியும்கூட. நீங்கள் பணத்தை அதிகமாக செலவு செய்கிறீர்கள் மதத்தில், நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை கவிதையை ரசிக்கிறீர்கள். சாதாரணமாகவே, உங்கள் குழந்தைப் பருவம் இருந்திருந்தாலும், 32 வயதுக்குப் பின்னர், நீங்கள் பெருமளவிற்கு சுகபோகங்களைப் பெறுவீர்கள். நீங்கள் மிகவும் மெலிந்த உடல் அமைப்பு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு ஏராளமாய் பணம் இருந்தும், செல்வம் நிலையாய் இருக்காது உயரமாகவும் சிவந்த மேனியுடனும், நீங்கள் தோற்றம் கொண்டிருப்பீர்கள். உங்கள் திட்டங்களிலும் முயற்சிகளிலும் மிகவும் கவனமுடைய நீங்கள், உங்கள் அறிவாற்றல் முலம் வெற்றி காண்பீர்கள். ஓயாமல் பேசும் நீங்கள், கலைகளில் ஆர்வமிக்கவர் கலைசார்ந்த வழிகளில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். நீங்கள், உங்களைப்பற்றியே நினைப்பவர் உங்களுக்கு மிகவும் அடர்த்தியான கேசம் இருக்கும். பணத்தை, வீணாகச் செலவிட்டு விரயம் செய்வீர்கள். குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிகவும் பலவீனமாகவும் ஒல்லியாகவும் இருந்திருக்கலாம். பிறகு, போகப்போக, 14 முதல் 19 வயது வரையான காலத்தில், நல்ல உயரமாக வளர்ந்துவிடுவீர்கள். உங்களுக்கு மெலிந்த உருண்டையான முகம் இருக்கும். உங்கள் கால் முட்டில் ஒரு தழும்போ, மச்சமோ இருக்கலாம். நீங்கள் அனுபவ ரீதியில் செயல்படுபவர் அரசியலில் வெற்றி காண்பீர்கள். நீங்கள் இடர்ப்பாடுகளைக்கண்டு அஞ்சுவதில்லை உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர் பல இயல்களைக் கற்றறிந்தவர். நீங்கள் உங்கள் திட்டங்களை, மிக விரைவாக ஏற்பாட்டுடன் நடத்தி, நிறைவேற்றக் கூடியவர். உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உள்ளது. நீங்கள் நன்கு படித்தவர் மரியாதைக்குரியவர்
Saturday, 19 April 2014
"தனுசு" லக்கினம்,,,,!
நீங்கள் தனுசுலக்னத்தில் பிறந்தவர். ராசி அமண்டலத்தில் அது 9 - வது
ஸ்தானத்தில் உள்ளது அதன் அதிபதி குரு. நீங்கள் ஒரு நல்ல குணவான் உங்களுக்கு அழகிய பல்வரிசை உள்ளது நீங்கள் மிகவும் செல்வச்செழிப்பு படைத்தவர் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். நீங்கள் நன்கு படித்தவர் அறிவாளி விவேகமிக்கவர். நீங்கள், உங்கள் தொழிலில் பலராலும், விரும்பி நேசிக்கப்படுகிறீர்கள். நீங்கள் அயல் நாடுகளுக்குப் பயணம் செல்வீர்கள். நீங்கள் படித்தவர்களையும், பெரியோர்களையும், மதித்து மரியாதை செலுத்துவீர்கள். சுறுசுறுப்பான உங்களுக்கு ஒருசில குழந்தைகளே இருக்கும். உங்கள் குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவித்திருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையின் பின் பகுதியில், நீங்கள் செல்வச் செழிப்பையும், நன் மதிப்பையும் சிறப்பையும் பெறுவீர்கள். 22 ர். நீங்கள் மிக சுறுசுறுப்பானவர் துணிச்சல்மிக்கவர். விளையாட்டுப்போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை, நீங்கள் விரும்புகிறீர்கள். புகழும் சிறப்பும் அடைவதற்கு நீங்கள், எப்போதுமே பேராவல் கொண்டவர். நீங்கள், அதிகம் உயரமாக இருக்கமாட்டீர்கள் நல்ல கவர்ச்சியான குரல் வளம் கொண்டிருப்பீர்கள். உங்கள் சுய நலனுக்கு, நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருபவர். நீங்கள் சமய ஈடுபாடு உடையவர் பொது ஸ்தாபனங்களுக்கு நீங்கள் தலைவராக இருக்கலாம். வேதாந்தத்திலும், மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலும், உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது. கவர்ச்சியான தோற்றமுடைய நீங்கள், எப்போதுமே சிரித்த முகத்துடன், பகட்டு எதுவுமின்றி இருப்பவர் உண்மையை விரும்புபவர் இளகிய, கனிவுமனம் படைத்தவர். மிகவும் சுயேச்சையான கருத்துக்களைக் கொண்டவர். எந்த ஒரு விஷயத்தையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுப்பதில் நீங்கள் மிகவும் திறமைசாலி பல விஷயங்களைப் பற்றி படித்துத் தெரிந்து கொள்ளவல்ல நீங்கள், கடவுளிடம் பக்தியுடையவர் நன்கு உழைக்கக்கூடிய நீங்கள், சோம்பேறியாக, எந்த வேலையுமே செய்யாமல் சும்மா இருத்தலை விரும்புவதில்லை.
சாமர்த்தியசாலியான 'விருச்சிக"லக்கினகாரர்களே,,,,!
நீங்கள், விருச்சிக லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் விருச்சிகம்,
ஏழாவது ஸ்தானத்தில் இருக்கிறது. உங்களுக்கு ஆரோக்கியமான உடலமைப்பும், அகலமான மார்பும், தீர்க்கமான கண்களும் உள்ளன. நீங்கள் மிகப் பெருமளவிற்கு புத்திசாலி சாமர்த்தியசாலி உங்கள் சகோதரர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்பு வரலாம். நீங்கள் கருணை உணர்வற்ற கல்நெஞ்சக்காரர். உங்கள் காரியம் ஆகவேண்டும் என்று ஏற்பட்டால், உண்மையைக்கூட நீங்கள் பேசமாட்டீர்கள். மற்றவர்களின் எண்ணத்தை, உங்களால் மதிப்பிட முடிகிறது. ஜோசியத்தில் உங்களுக்கு ஈடுபாடு உண்டு. உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், சில துன்பங்களை நீங்கள் அனுபவித்திருக்கலாம் ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதியில், பெருமளவு மகிழ்ச்சியை நீங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுக்கு நீண்ட ஆயுட்பலம் இருக்கும். நீங்கள், மற்றவர்களுடன் அதிகம் பேசிப் பழகாதவர் கோபக்காரர். மிகவும் லட்சியப் பேரவா கொண்ட நீங்கள், வாழ்க்கையில் சுபிட்சத்தைப் பெறுவதற்காக, பல வழிகளைப் பயன்படுத்துவீர்கள். நீங்கள் சந்தேக புத்தி கொண்டவர் முர்க்கத்தனமானவர் எதிலும் அதிகாரத்துவம் செலுத்துபவர். பிரதிகூலமான சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும், முன்னுக்கு வரக்கூடியவர். நீங்கள் எப்போதுமே சுறுசுறுப்பானவர் சோம்பேறித்தனமாக, வேலையே செய்யாமல் சும்மா இருப்பது உங்களுக்கு பிடிக்காது. உங்கள் குறிக்கோள் எட்டப்படும்வரை நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். உங்களுக்கு நல்ல கற்பனை ஆற்றல் உண்டு. நீங்கள் எதையும் உறுதியாக அடித்துச் சொல்பவர் வெற்றிக் கொள்ளத்தக்கவர் உங்களுக்கு மனக் கவலைகளும் பதட்டமும் இருக்கலாம். முளை நோயினால் நீங்கள் பாதிக்கப்படலாம். வீக்கம், காயங்கள், தீப்புண்கள், உயரத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது அல்லது விபத்துக்கள் போன்றவை, உங்களுக்கு நேரிடலாம். நீங்கள் அழகை ரசிப்பவர் சிற்றின்பப்பிரியர் நீங்கள் நடைமுறை ரீதியில் செயல்படுபவர் எதுவுமே நிரூபிக்கப்படாதவரை நீங்கள் அதனை நம்புவதில்லை. நீங்கள் பரந்த மனப்பான்மை உடையவர். எல்லா வகையான கருத்துக்களையும், யோசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்பவர் ஆனால் குடும்பப் பழக்க வழக்கங்களுக்கு மதிப்புக் கொடுப்பவர். நீங்கள் எப்போதுமே, உங்கள் காரியங்களை, கடைசி நிமிடம் வரை ஒத்திப் போடக்கூடியவர். உங்களுடைய கடுமையான உழைப்பாலும், அறிவாற்றல் திறனாலும், உங்கள் தொழில் முயற்சிகளில், நீங்கள் முன்னேறுகிறீர்கள். உங்களுக்கு, எளிதில் கோபம் வந்துவிடுகிறது. நீங்கள் திறமை வாய்ந்த ஒரு விளையாட்டு வீரர்.
Subscribe to:
Posts (Atom)