Tuesday, 27 August 2013
Friday, 23 August 2013
நல்ல சுபாவம் கொண்ட "ரேவதி"நட்சத்திரகாரர்களே,,,,,,!!!
வான்மண்டலத்தில் ரேவதி நட்சத்திரமானது வியாழன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே நல்ல சுபாவம் உடையவராகவும் கொண்ட நட்சத்திரமாகும்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், , நல்ல சுபாவம் உடையவராகவும், பணக்காரராகவும், நன்னம்பிக்கையும், அறிவாற்றலும் படைத்தவராகவும், நியாயமான வழிகளில் பணம் சம்பாதிப்பவராகவும் நீங்கள் விளங்குவார்கள். நீங்கள், வயதில் பெரியவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பணிந்து நடப்பதுடன், மரியாதையும் அளிக்கிறீர்கள். நீங்கள் இந்த குந்த் முல நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், பூஜை செய்திடவேண்டும். உங்கள் 17, 21, மற்றும் 24 ஆம் வயதை எட்டும்போது , நல்ல அதிருஷ்டத்தைப் பாக்கலாம் காரணம் சந்திரனுக்கும் ரேவதிக்கும் சிவபார்வதி காட்சி கொடுத்ததால் இது ரேவதி நட்சத்த்திர தலமாக விளங்குகிறது.
இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் திருச்சி மாவட்டம் காருகுடி (இவ்வூர் திருச்சியிலிருந்து நாற்பது கிலோமீட்டர் உள்ள முசிறி அங்கிருந்து தத்தய்யங்கார் பேட்டை சென்று 21 கிலோமீட்டர்தூரத்தில் கருக்குடி உள்ளது இங்குதான் சிவன் "கைலாசநாதராக''அருள்பாலிக்கிறார்.
இந்த நட்சத்திரதலத்தில் ரேவதி நட்சத்திர நாளன்று இத்தலத்தில்27 எண்ணிக்கை வரும்படி2 7 திருமாங்கல்ய சரடு 27 ரவிக்கை துணி 27 பொட்டலங்களாக கட்டி சிவனுக்கும் பார்வதிக்கும் சமர்பித்து கோவிலுக்கு கோவிலுக்கு வருவோருக்கு கொடுத்தால் தடைபட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும் ரேவதி நட்சத்திரம் முடியும் நேரத்திலும் அஸ்வினி நட்சத்திரம் ஆரம்பமாகும் நேரத்திலும் பால் அபிசேக செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும்.
Tuesday, 20 August 2013
எதிரிகளை ஒடுக்கிவெற்றிகொள்ளும்திறன் படைத்த""உத்திரட்டாதி'" நட்சத்திரகாரர்களே,,,,,!!!
வான்மண்டலத்தில் உத்திரட்டாதி நட்சத்திரமானது வியாழன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே தாராள சிந்தையுடையவராக கொண்ட நட்சத்திரமாகும்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், ஒரு சிறந்த மேடைப் பேச்சாளராகவும், மகிழ்ச்சி நிறைந்தவராகவும், நற்குணமும், எதிரிகளை ஒடுக்கி வெற்றி கொள்ளும் திறனும் மிக்கவராகவும் விளங்குவார்கள். , தாராள சிந்தையுடையவராகவும், செல்வவளமும், அறிவாற்றலும் நிறைந்தவராகவும் இருப்பர்கள். உங்களுக்கு கவர்ச்சிகரமான, வசீகர உடற்கட்டு இருக்கும். உங்களுக்கு குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் இருப்பார்கள். உங்கள் வாழ்க்கையில், 27, 31 ஆம் வயதில்தான், நல்ல அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள்காரணம் தேவசிற்பி விஸ்வகர்மா ,அகிர்புதன் ,ஆங்கிரசர்,அக்னி புரந்தக மகரிசிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் புதுக்கோட்டை மாவட்டம் தீயத்தூர் (இவ்வூர் புதுக்கோட்டைளிருந்து நாற்பது கிலோமீட்டர் உள்ள அங்கிருந்துஆவுடையார் கோவில் சென்று திருபுவன வாசல் செல்லும் வழியில் 21 கிலோமீட்டர்தூரத்தில் தீயத்தூர் உள்ளது இங்குதான் சிவன் "சகஸ்ரலக்ஷ்மீஸ்வரராக'அருள்பாலிக்கிறார்.
இந்த நட்சத்திரதலத்தில் உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று இத்தலத்தில் அபிசேக ஆராதனைசெய்து வழிபட்டு ஹோமம் செய்து சக்கரை பொங்கல் நெய் வேதியம் செய்து வழிபட்டால் பணகஷ்டம் தீரும் தடைபட்ட காரியம் நடக்கும் என்பது நன்பிக்கை.
Saturday, 17 August 2013
திடமான மனமும் உடல்வலிமையையும் கொண்ட"பூரட்டாதி"நட்சத்திரகாரர்களே,,,,,,,!!!
வான்மண்டலத்தில் பூரட்டாதி நட்சத்திரமானது சனி மற்றும் வியாழன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே திடமான மனமும் உடல் வலிமையையும் கொண்ட நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், பணம் சம்பாதிப்பதில் வெற்றி காண்பார்கள் அதிகமாகப் பேசக்கூடியவர்கள், நன்கு படித்தவர் தேர்ச்சிபெற்றவர். நண்பர்களுடன் நல்ல உறவுகள் இருந்து வரும். தெளிவாகப் பேசுவர்கள். இவர்கள் வாழ்க்கைத் துணை, பெரும்பாலும் ஒரு பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவராக இருப்பார். , வெகு எளிதில், எதிர்பாலைச் சேர்ந்தவர்களால் ஈக்கப்படுகிறீர்கள். குழந்தைகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள். உங்களுக்கு, நல்ல, உடல்கட்டு இருக்கும்.காரணம் "காலபைரவர்'' பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளை படைத்தார்.
இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ரங்கநாதபுரம் (இவ்வூர் திருவையாதிளிருந்து 1 7 கிலோமீட்டர் திருக்காட்டுப்பள்ளி அங்கிருந்து அகரபேட்டைசெல்லும் வழியில் 2 கிலோமீட்டர்தூரத்தில் ரங்கநாதபுரம் உள்ளது இங்குதான் சிவன் "திருவனேஸ்வரராக'அருள்பாலிக்கிறார்.
இந்த நட்சத்திரதலத்தில் பூரட்டாதி நட்சத்திர நாளன்று இத்தலத்தில் அபிசேக ஆராதனைசெய்து வழிபட்டு வந்தால் குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள்குழந்தைபேறு பெறலாம் இங்குஏழைகளுக்கு ஏழுவகையான வண்ண ஆடைகளை தானம்செய்தால் ஏழேழு ஜென்ம பாவங்கள் தங்கள் தலைமுறையை தொடராமல் விலகும் என்பது நன்பிக்கை.
Monday, 5 August 2013
விசாலமானசிந்தனையுடன்செயல்படும் "சதயம்" நட்சத்திரகாரர்களே,,,,,,!!!
வான்மண்டலத்தில் சதயம் நட்சத்திரமானது சனி கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே விசாலமான சிந்தனையுடன் செயல்படும் வல்லமையமையும் வசீகரமான தோற்றமும் கொண்ட நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தர்மசிந்தை உடையவராகவும், செல்வவளமும், தாராள மனமும், சுயேச்சையான கருத்தும், புத்திசாலித்தனமும், அறிவாற்றலும் நிறைந்தவராகவும் விளங்குவர்கள். பகைவர்களை ஒடுக்கி வெற்றி காண்பர்கள். பலரும், மதித்து மரியாதை காட்டுவார்கள் நல்ல அந்தஸ்தும் அதிகாரமும் இருக்கும். நீங்கள் எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகச் சொல்லிவிடக் கூடியவர் ஆனால் உண்மை பேசுபவர்/ காரணம் இத்தலத்தில் திருநாவுக்கரசருக்கு சித்திரை "சதயம்" நட்சத்திரநாளில் இறைவன் முக்தி கொடுத்தரர்
இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் திருவாரூர் மாவட்டம் திருப்புகலூர் (இவ்வூர் நன்னிலத்திளிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 1௦ கிலோமீட்டர்தூரத்தில் திருப்புகலூர் உள்ளது இங்குதான் சிவன் அக்னிபுரீஸ்வரராகஅருள்பாலிக்கிறார்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் வரும் சதயம் நட்சத்திர நாளில் இத்தல இறைவனை வழிபாடு செய்தால் ஆயுள்விர்த்தி ஆரோக்கியம் நற்பண்புகள் உண்டாகும்.
Subscribe to:
Posts (Atom)




