Thursday, 21 November 2013

துலாம்லக்னம்,,,,,!!!

          துலாம் லக்கினத்தில் ஜென்மம் எடுத்த நீங்கள் தடித்த சரீரம் தெய்வ வழிபாட்டில் ஆச பாசங்கள்,மனகுழப்பங்கள் நீங்கும் சொல்வன்மையினால் எல்லோரையும்  கவரும் சக்தியுடையராகவும்,சான்றோர்களுக்கு மரியாதை செலுத்துவராகவும்,நிர்வாக துறையில் ஆலோசனை குழுவில் தனி சிறப்புபெற்றவராகவும் விளங்குவீர்கள்.  சொல்லிலும்,செயலிலும் நீதி நேர்மை வெளிப்படும். சிறந்த பதவிகளையும்,செல்வாக்கையும் பெற்று வாழும்
உயர்ந்த மனிதராக விளங்குவீர்கள்.
கள்ளம் கபடம் இல்லாத வாழ்க்கை நடத்தி இன்புற்று வாழ்வீர். நீச்சல்போட்டி,படகுபோட்டி,போன்ற
விளையட்டுக்களிலும்  நாட்டமுடையவர்கள் நீங்கள்.  உங்களுக்கு பிறக்கும் ஆண் மக்கள் கடின உழைப்பளியாகவும். விடாமுயர்சி  உடையவராகவும்
இருப்பர் நீதி நேர்மை கடைபிடித்து புகழ் அடைவீர்கள்.
பெண்களிடத்தில் சொத்து சம்பந்தமான குழப்பங்கள், நெருங்கிய நண்பர்களின் வெறுப்பு இவைஉண்டாகும் எனவே கண்ணியத்துடன் செயல்படவேண்டும்
ஆகாரத்தில் கட்டுபாடு   இல்லாமையும் சுரப்பிகளின் கேடுகளால் அஜீரணம், வாயிற்று நோய் போன்றவற்றை உண்டாக்கலாம், தண்ணீர் பந்தல்
,நந்தவனம் போன்றவற்றை அமைக்க ஆவல் உள்ளவர்.வெளிநாட்டுப்பயணம் அணுகூலம் ஏற்படும் கண்ணிராசி 1 2 ஆம் வீடாக அமையபெற்றதால்
பெண்களிடத்தில் நெருங்கி பழகுவீர்கள். கச்சேரி,கல்யாணம் என்று பணத்தை விரயம் செய்வர்கள்
 உங்கள் லக்கினமானது அதனுடைய இடத்தின் 3 வது திரிகோணத்தில் அமைந்திருப்பதால் தாங்கள் பொருளாதாரத்தை பொறுத்தவரை
அதிஷ்டகாரர்.தாங்கள் ஹோட்டல் தொழிலில் மேன்மையடைவீர்கள் தாங்கள் சங்கீதம்,நுண்கலைகள் ஆகியவற்றில் கவரபடுவீர்கள் தங்களின்
ஆரம்பகால கடினமானதாக இருக்கும்,ஆனால் தங்கள் நிலையினிலும் திடீரென்று  பதவி உயர்வோ அல்லது முன்நேற்றமோ ஏற்படும்.
வாழ்கையில் 16, 18, 23, 25, 27, 32, 39, 46, 53, முக்கியமான வருடங்கள்,,,,,.  
             

Friday, 8 November 2013

கன்னி லக்னம்,,,,,,,,!!!

   கன்னி லக்கனத்தில் ஜென்மம் எடுத்த நீங்கள் இனிமையான தோற்ற போலியுடன், ஆடை அலங்காரத்தாலும் காண்போரை கவர்வீர்கள். பெண் குழந்தை 

அதிகம்  பெறும் வாய்ப்புண்டு. பெண் சிநேகிதர்கள் அதிகம் ஏற்படும். கல் நெஞ்சக்காரராகவும், கபடராகவும் காணப்படுவீர்கள். வெட்டுகாயங்கள் 

உடல் புண் உண்டாகாமல்  இருக்கவும். சிறந்த நல்லோளுக்கத்தோடு செல்வம் சம்பாதிப்பீர்கள் நில புலன்கள் மூலமும் விவசாயம், 

தோட்டக்கலை, மூலமும் செல்வம் உண்டாகும், போர்வீரராகவும்,  பட்டாளம், போர்கருவி சம்பந்தமான தொழிலிலும் ஈடுபடவாய்ப்புண்டு, கால்நடை 

பிராணிகள் வளர்ப்பதில் ப்ரியமுள்ளவராக இருப்பீர்கள். தன் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பாதையை தானே வகுத்துக்கொண்டு கட்டுப்பாட்டுடன் 

முன்னேறவும் நுரையீரல் சுவாசக்குழல் முதலிய அவயங்களில் நோய்களும் பித்த சரீரமும் உள்ளவர்.

 

     ஆண் குழந்தைகளின் நன்னடத்தையில் கவனமும்,அன்பும் மேற்பார்வையும் பயனளிக்கும்,வாழ்க்கைத்துணைவர் உடல் உறவில் அதிக ஆர்வம் 

காட்டுபராகவும், குழந்தைகளின் அழகில் லயித்தவராகவும்,  தற்புகழ்ச்சி உடையவராகவும் அமைவர்.கல்வியில் கருத்தும்,பயிற்சியில் பற்றுதலும் 

கொண்டு நல்ல மாணவனாகவும், ஆசிரியராகவும் இருப்பீர்கள்,புகழையும்,மக்கள் ஆதரவும்பெருவீர்கள், இனிமையான சுபாவமும் வாழ்க்கை முறையும் 

பிறருக்கு எடுத்துகாட்டாக  விளங்கும்.பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் பல சமூகசேவைகளை செய்வீர்கள் 

 

    தங்கள் லக்னமானது அதுனுடைய இடத்தின் முதல் திரிகோணத்தில் அமைந்துள்ளதால், கடின உழைப்பினால் தாங்கள்  செல்வத்தை 

சம்பாதிப்பீர்கள்.வாழ்கையின் முற்பகுதியில் நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு யூகத்தின் அடிப்படையில் செய்யும் காரியங்களினால் உண்டாகும்

சிக்கல்களை தவிர்த்து விடுங்கள்.தங்கள் சுயநலத்திற்காகவே வேலை செய்யும் சுயநலவாதிகளின் தாக்கம் ஏற்ப்பட வாய்ப்புகள் உள்ளன.

கவலையீனமான  திட்டங்கள்,நடவடிக்கைகளின் செயல்களில் இருந்து விலகி இருங்கள் தாங்கள் புத்திசாலிதனமான முதலிடுகள்,சுகாதாரம் 

சம்பந்தமான பொருள்கள்,வாசனை திரவியங்கள்,சங்கீதம் ஆகியவை சம்பந்தமான வியாபாரங்கள் மூலமும் பணம் சம்பாதிக்கமுடியும். 

ஒரு சில சந்தர்பங்களில்  தாங்கள் வழக்குகள் சம்பந்தமான விவகாரங்களில் சிக்கிக்கொள்ள நேரிடலாம்.தங்களின் வாழ்க்கையின் 

முக்கியமான வருடம்18, 24, 30, 36, 42, 49, 55,    இந்த சந்தர்பத்தை நழுவவிடதீர்கள்......வாழ்க வளமுடன்             

      

Thursday, 24 October 2013

சிம்மலக்னம்,,,,,,!!!

        சிம்ம லக்னத்தில் ஜென்மம் எடுத்த நீங்கள் அஞ்சா நெஞ்சமும் வீரமும் உங்களின் தனி முத்திரையாகும்.எத்தகைய கடுமையான எதிர்ப்பையும்
 பொருபடுத்தாமல்  துணிவுடன் செயல்படுவீர்கள்.வெற்றியில் மிகுந்த நம்பிக்கை உடையவர்.நீங்கள் மேலதிகாரிகளிடமிருந்து நல்ல பலன்கள்
எதிர்பாக்கலாம்.பித்தம், வாதம், முதலியன உண்டாகும். கரமான அசைவ உணவுகளில் நாட்டமுடையவர்.
 
      மற்றவர்களை நிலைகுலையாமல் கட்டுபடுத்தி, தைரியமூட்டுவதில்    சிறந்துவிளங்குவீர்கள்  புத்திர சந்தானங்களை குறிக்கும் ஐந்தாம்வீடு
தனுசு ராசியாக அமையப் பெற்றதால்  குழந்தைகளால் ஏற்படும் நற்பயன்கள் பொதுவாக குறைந்திருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்தாலும்
முடிவில் பயனுற்றவர்களே  உங்களுக்கு எதிரிகளாவர்கள். நீரினாலும், கூரிய  ஆயுதங்களாலும் விபத்துக்கள் உண்டாக வாய்ப்புண்டு.
எச்சரிக்கை தேவை.
     நல்லவர்களின் ஆசியும், ஆதரவும் பெற்றுப்பீர்கள், விருந்தினரை    அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்வது உங்களுடைய மிகசிறந்த குணம்
பெண்களின் அன்பை பெறுவீர்கள். நல்ல  இல்வாழ்க்கை அமையும். மேலதிகாரிகளிடமிருந்து நல்ல மதிப்பையும் மரியாதையும் கிடைக்கும்
பணம் செலவு செய்வதில் கட்டுப்பாடு இல்லாதவர், நல்லவர்களால்  போற்றபடுவீர்கள்.

     உங்கள் லக்கனமானது அதனுடைய இடத்தின் 2 வது திரிகோணத்தில் அமைந்திருப்பதால், தங்களது ஆர்வமும்,திறமையும்,
இலக்கியமும் எழுதுதல்,பத்திரிகைத் தொழில், சங்கீதம், இவைகளின் மூலம் பணம் சம்பாதிக்க வாய்ப்புண்டு.50 வது வயதுக்குப்பின் இன்சூரன்ஸ்
அல்லது பணம்  முதலீடு ஆகியவற்றில் இருந்து தங்களுக்கு கொஞ்சம் செல்வம் கிடைக்கலாம்.தங்கள் வாழ்கையில் மிக முக்கியமான வருடங்கள்
23,26,31,36,45,53 மற்றும்54,56 வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.           

Wednesday, 9 October 2013

கடக லக்கணம்,,,,,,!!!

          கடக லக்கினத்தில் ஜென்மம் எடுத்த நீங்கள் வயதுக்கு மீறிய உடல்வாகு அமையபெற்றதால் பித்த சம்பந்தமான நோய்கள்உண்டாகும்.மற்றவர்களுக்குவேண்டியவற்றை,மனம்அறிந்துவழங்குவீர்கள்.திறமைமிக்கவராகவும்,
சுறுசுறுப்பாகவிளங்குவீர்கள்.அறிவாற்றலைவெளிபடுத்தும்
துறையில்வெற்றிபெறுவீர்கள்.நல்லவர்களைநாடிசென்று,அவருடன் உறவு கொள்ள விருப்பம் உண்டாகும்.ஆன்மீக ஞானிகளின்நல்லாசிகளையும்ஆதரவையும்பெறுவீர்கள்.சொந்தமுயற்சினால் பொருள் சம்பாதிப்பீர்கள் என்றாலும் பெரும்பான்மையான பொருள்களை பிறருக்கு கொடுத்து
உதவிசெய்து,தானும் பயன் பெறுவது கடக லக்னத்தில் பிறந்த உங்களுடைய தனி தன்மையாகும்.ஆயுதங்களை எப்போதும் தன்வசம் வைத்தும்
அதை கையாளும் பயிற்சியும் இருக்கும்.இயற்கைலேயே இனிய சுபாவமுடையவர் என்றாலும் இடையிடையே முன்கோபத்தினையும் காணலாம்
எராளமான நண்பர்களும் உண்டு.
    

    மகரராசி ஏழாம் வீடாக அமையபெற்றதால் உங்கள் வாழ்க்கைதுணைவர் கர்வம் உடையவராகவும்,இழிவான குணங்களுடயவரகவும்,
பேரசைகாரராகவும்கொடுமைப்படுத்துபவராகவும்  அமைய வாய்ப்புண்டு.
    எட்டாம் வீடு கும்பராசி ஆகையினால் தீயினால் விபத்து உண்டாக வாய்ப்புண்டு,முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.உடல் காயங்களை
அசட்டை  செய்யாமல் உடனடி சிகிச்சை செய்யவும்.உணவு முறையில் கட்டுப்பாடு அவசியம். பலரும் செய்ய நடுங்கும் காரியங்களை தைரியமாக
செய்வீர்கள் சங்கீதம்,கால்நடைகள் வளர்ப்பு போன்றவற்றில் வருமானம் பெருகும்.
  
     தங்கள் லக்கனமானது அதனுடைய இடத்தின் முதல் திரிகோணத்தில்அமைந்திருப்பதால் பணத்தை பொறுத்தவரை நீங்கள் கவனமாக
இருக்க வேண்டும்   மக்கள் உங்களை கஞ்சன் என்று கூறுவர்கள். செல்வம் சம்பாதிப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.சிலசமயங்களில்
தங்களுக்கு பெரும் பணநஷ்டங்கள் ஏற்படும் தனிப்பட்ட முறையால் வியாபாரத்தினால் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்தங்கள் வாழ்கையில்
மிக முக்கியமான வருடம் 17, 24, 29, 31, 39, 49, 52, இந்த சந்தர்பத்தை நழுவவிடதீர்கள்.  

       

Monday, 30 September 2013

மிதுனலக்கணம்,,,,,,,!!!

 மிதுனலக்கணத்தில் ஜென்மம் எடுத்த நீங்கள்  சிவந்த மேனி அழகுடன் இருப்பிர்கள். பொதுஅறிவு மிகுந்தவர் .மேல்அதிகாரிகளிடமும் ,

அரசாங்கத்திடமும் விரோதத்தை சம்பாதிக்காமல் இருப்பது நல்லது.மற்றவரை கவரும் இயல்பும்,பேச்சு திறனும் நிறைந்தவர்.   

சங்கீததநாட்டியத்திலும் ஆர்வமுள்ளவர்.நீங்கள்விரும்பும் எல்லா உணவுப் பண்டங்களும் உங்களுக்குக் கிடைக்கும் ,நீரில் 

கண்டம் உண்டாகலாம் .நேர்மை நிரந்தவராதலால்பிறரின் அன்பையும் ,ஆதரவையும் சுலபமாகப் பெறுவீர்கள் மரசம்பந்தமான வியாபாரங்களில் 

ஈடுபட வாய்ப்பு உண்டு .

   சிம்மராசி உங்கள் முன்றாம் வீடாக அமைந்திருப்பதால் அஞசாநெஞ்சம்முடையவராக இருப்பீர்கள் .எனினும் திய நட்ப்புகளைத்தவிர்ப்பது 

நலம் நீங்கள்விரும்பும் எல்லாம் பொருள்களும் ,உரிய நேரத்தில் கிடைக்கும் .மற்றவரை சொல்லாலும் ,செயலாலும் புண்படுத்தும் இயல்புண்டு

   ஏழாம்வீடு தனுசு ராசியாக அமையப் பெற்றதால் ,மற்றவரின் குறைகள் மிகைபடுத்துவராகவும்  கலக புத்தி உடையவரும் ,கர்வமும் 

 உடையவருமான வாழ்க்கைத்துணைவரை அடைந்து ,அவரால் உண்டாகும்இன்னல்களை தவிர்க்கப் போராடும் சூழ்நிலைகள் உங்களுக்குஉண்டாகும்.

    மகரராசிஉங்கள்எட்டம் வீடாக இருப்பதால்   சிறந்த அறிவாளியாகவும் ,புகழ் உடையவராகவும் நன் நடத்தையுள்ளவராகவும் திகழ்விர்கள்   .

விடாமுயற்சியும்,துணிவும்,பரந்த மனப்பான்மையும் உடையவராக இருப்பீர்கள்.இலக்கியத் துறையில்ஈடுபடும்,ஆழ்ந்த அறிவும் உண்டாகும்.

விலைஉயர்ந்த கலைபொருளை  சேகரிக்க,பணம் செலவு செய்யும் குணம் முதலியவற்றை தனக்காகவும்,தற்பெருமைக்காகவும்,பணம் விரயம் செய்யும் 

மனபாங்கு முதலியவை உங்களுடைய குணங்களாகும்.

  உங்கள் லக்கினமானது அதனுடைய இடத்தில்2 ;வது திரிகோணத்தில் அமைந்திருப்பதால்,தங்களுடைய தொழிலிக்கும், இதர எவ்வித முயற்சிகளும்,

அரசுத்துறைகளில் சேவை செய்தால்  என்பது சாதகமாக இருக்காது.தங்கள் முதுமை  பருவத்திற்காக சேமிக்கவேண்டும் என்பதை மறந்து விடலாம் 

சிறந்த நுன்னரிவுடயவராக இருந்தபோதிலும்,தாங்கள் பெரும் செல்வ இழப்பை அடைவீர்கள்.தங்களால் நன்மை அடைவர்களைப் பற்றி தாங்கள்

 எப்பொதும்  விழிப்புடன் இருக்கவேண்டும் வாழ்கையில் முக்கியமான வருடங்கள் 19,23,25,29,32,36,43,46,49, இதை சந்தர்பத்தை சரியாக 

பயன்படித்தி கொள்ளுங்கள் 

      

Friday, 27 September 2013

ரிஷப லக்கணம்,,,,,,!!!

      ரிஷபலக்கினத்தில்ஜென்மம் எடுத்த நீங்கள் வேண்டாத மனகவலைகள் தரும் செயல்களில் ஈடுபடவேண்டாம் 

.உறவினர்களால் அவமானம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.நல்லோரின் நட்பை முழுவதுமாக 

இழக்க நேரிடும்.அன்றாடம் உபயோகிக்கும் கருவிகளை கையாளும்போது கவனம் தேவை.

பெண்கள் மூலம் பொருள் கிடைக்கும்.ஆடை ஆபரணங்களை நிறைவாக பெற்றுப்பீர்கள்.தொழிலதிபர்களின் 

நட்புறவு ஏற்படும்.எப்போதும் மனநிறைவுடன் முக மலர்ச்சியுடனும் தோன்றுவீர்கள்.ஐந்தாம் இடம்

 கண்ணிராசியாக அமையபெற்றதால் உங்களுக்கு நல்ல அழகுள்ள பெண் குழந்தை பெற்று மகிழ வாய்ப்புண்டு

.அப்பெண் குழந்தைகள் ஆபரணங்களில் பிரியராகவும்,பதிபக்தி நிறைந்தவராகவும் இருப்பார்கள்,

பத்தாம் இடம் கும்ப ராசியாக அமைந்திருப்பதால் விரோதிகள் செயல்களை எதிர்க்கும் 

திறமை உள்ளவராக இருப்பீர்கள்.உங்களுடைய உரையாடலில் இனிமையும்,பொருளும்,நிறைந்திருக்கும்

   

     உங்களின் லக்கினமானதுஅதனுடைய இடத்தில் முதலாவது திரிகோணத்தில் பொருந்தி இருப்பதால்,

எராளமான பணம் சம்பாதிப்பீர்கள் .ஆனால் அது ஒரு போதும் தங்கள் கையில் தங்காது தங்கள் 

மனகவலைகள் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். தங்களிடத்தில் உள்ள எல்லாவற்றியும் 

செலவழித்து விடுவீர்கள் .கடன்களுக்கு ஆளாகாதவாறு. ஜாக்கிரதையாக இருங்கள் .தங்கள் வாழ்க்கையில் 

முக்கியமான வருடங்கள் 21, 23, 31, 42, 51, 65, 68, இந்த சந்தர்பத்தை நழுவ விடாதீர்கள்.  .            

Friday, 6 September 2013

மேஷ லக்கணம்,,,,,,!!!

           
        

                   மேஷலக்கினத்தில் ஜென்மம் எடுத்த நண்பர்களே,,,,!சகோதிரிகளே ,,,,,!உங்களுக்கு முன் கோபமும்,பதட்டமும்,
உங்களிடம்  அதிகமாகவே காணப்படும் உங்களின் வாழ்கை துணைவரின் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்வீர்கள்
விவசாயம் தோட்டகலை போன்றவற்றில் ஆர்வம் இருக்கும்செல்வம் சேர்ப்பதில் அதிக பற்றுதல் இல்லாவிட்டாலும் கிடைக்கும்பணத்தை விரயம் செய்யாமல் சேமித்து வைக்கும் குணம் உண்டு நீங்கள் வண்டி ,வாகனம் முதலியவற்றில்அதிகம்
பற்றில்லாதவர்.சமயவயதினர் நட்பையையும்,உறவையும் விரும்பி ஏற்பீர் நேர்மை மற்றும் நன்னடத்தையும் மென்மையுடன் இருப்பிர்கள்  
     

              உங்களுடைய நான்காம் ராசி கடகம்.ஆகையால் அழகான தோற்றபொலிவு உள்ளவராகவும் அதிஷ்டசாலியாகவும்நன்னடத்தைஉள்ளவராகவும்,இளமை பூரிப்புடன்பிறரைகவர்ந்துதன்பால்இழுக்கும்காந்தசக்தியும்,சிறந்த படிப்பும்,பண்பும் அமைந்த உங்களுக்குமக்களின் ஆதரவும்,அன்பும் தானே வந்து சேரும். 

     

            மனிதாபிமானமிக்க அடிப்படைக் கொள்கைகளை கடைபிடிப்பீர்கள்.கண்கள் அழகும்,வசீகரமும் இருக்கும் உணவில் நாட்டமுடயவராக இருப்பீர்கள்
.அயல்நாடுகளில் சென்று வசிக்கும் பாக்கியமும் உண்டு.உறவினால் தீய நடத்தை உள்ள பெண்களின் நட்பை வெறுப்பீர்கள் இதனால் பலிசொல்லுக்குஆளாவீர்கள்இரத்தம் சம்பந்தமானவியாதிகள்வரக்கூடும்எச்சரிக்கையாகஇருக்கவும்.இலக்கியதுறையில்ஆதிகஈடுபாடுஇருக்கும்.என்றும்புகழுடனும்மன நிறைவுடன் வாழ்வீர்கள்தீயவர்களின் நட்பை அதிகம்  பெற்றிருந்தால் நல்ல வாழ்கை அமைவது கடினம் அதனால் தீயோரின் நட்பை விளக்கவேண்டும்.
 
       உங்கள் லக்கனமானது,அதனுடைய இடத்தின் இரண்டாவது திரிகோணத்தில் பொருந்தி இருப்பதால் பணம் சம்பாதிக்க அதிகம்
முயற்சி எடுக்க வேண்டி வரும்ஆனால் மிகவும் முன் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஆனால் பணக்காரர் என்று மக்கள்  நன்பும்படி செய்வீர்கள்.பொருளாதாரத்தை
பொறுத்தவரை உங்கள் வாழ்கையில்2௦ லிருந்து 23வரை 29 லிருந்து 35  வரை மிக முக்கியமான வருடங்கள் ஆகும்.                

Tuesday, 27 August 2013

'"லக்கணமே" வாழ்க்கையின்,, இலக்கணம்,,,,,,!!!

        ஜாதகத்தில் :ல " என்று போடப்பட்ட வீடுதான் முதல் வீடு எனப்படும்அதாவது லக்கணம்  எனப்படும் உதாரணம் சிம்மம் தான் முதல் வீடு என்றால் கன்னி 2 வது வீடு ஆகும்இப்படியே என்னிக்கொண்டுவந்தால் 12வது வீடு கடகம் ஒவ்வொரு வீட்டுக்கும் சில காரதுவம் உண்டு அதை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.


   முதல் வீடு ;இதைவைத்து ஜாதகருடைய நிறம்,உருவம் ,உயரம் குனதிசியங்கள் முதலியவற்றை அறியலாம் ஜாதகர் ஒல்லியானவர இல்லைகுண்டானவர கோபம் உள்ளவரா,இல்லை சாந்தமானவர என்றும் அறியலாம்.அவர் வாழ்கையில் உயர்த்த நிலைக்கு போவரா,தாழ்ந்த நிலைக்கு போவாரா என்பதை  தெரிந்து கொள்ளலாம் 


    இரண்டாம் வீடு; இது குடுப்பத்தை குறிக்கிறது பணவரவு ,செலவு,போன்ற பொருளாதாரத்தையும்  குறிக்கிறது  அதை தவிர நகைகள்வெள்ளிப்பாத்திரங்கள்சொத்துக்கள் ஆடை அணிகலன்களையும் இந்த வீட்டை வைத்து கூறலாம்.  இரண்டாம் வீட்டை வாக்குஸ்தானம்   என்று சொல்லப்படுகிறது. ஒருவர் கனிவாக பேசுவாரா அல்லது கடினமாக பேசுவாரா ,திக்கி திக்கி பேசுவாரா என்பதை சொல்லலாம் கண்ணாடி அணிபவர இல்லையா என்பதையும் கூறலாம்.

       மூன்றாம் வீடு;இந்த வீட்டை கொண்டு ஒருவரின் இளய சகோதரம்,தைரியம்பயணம்,தகவல்,வீடுமாறுதல்ஆகியவற்றையும்இந்த வீட்டை வைத்து கூறலாம்.  உடல் பாகங்களில் காதுகள்,தொண்டை.கைகள்,நரம்புமண்டலம் ஆகியவையும் கூறலாம்    இந்த வீட்டை தைரியஸ்தானம் என்று கூறுவர்.


     நான்காம்வீடு;  இது தாயாரைகுறிக்கும் வீடு, கல்லூரி வரையிலானபடிப்பு,வீடுவாசல்போன்றசொத்துக்கள்,கால்நடைகள்,விளைநிலங்கள்,அதிலிருந்து கிடைக்கும் தானியங்கள்   ஆகியவற்றையும் குறிக்கிறது  


     ஐந்தாம்வீடு;  இதை புத்திர ஸ்தானம் என்று அழைப்பார்கள் இதை பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கலாம். அதாவது இதை பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கலாம். அதாவது போன ஜென்மத்தில் ஒருவர் நல்லது செய்தவர இல்லையா என்று எந்தவீட்டை கொண்டு முடிவு செய்யலாம்.   ஒருவருக்கு குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா என்றும் முடிவு செய்யலாம் கலைத்துறை,சினிமா,டிராமா,லாட்டரி,குதிரைபந்தையம்,காதலித்து திருமணம் செய்தவரா இல்லையா ஆண்மீகவாழ்கை வேதம் மந்திரங்கள் ஆகியவற்றை கூறலாம்.


  ஆறாம்வீடு ; தாய்மாமன்,வேலை செய்யும் இடம், கவலைகள்,கடன்கள்.வியாதிகள்,உண்ணும் உணவு ஆகியவற்றை எல்லாம் இந்த ஆறாம் வீட்டை வைத்து கூறலாம்.


   ஏலாம்வீடு;  இந்தவீடு  திருமணம், வியாபாரம், பிரயாணம்,மரணம் ஆகியவற்றையும் குறிக்கும் வீடு இந்த ஏலாம் வீட்டை வைத்து கூறலாம்.


      எட்டாம் வீடு ;ஒருவரின் ஆயுளை குறிக்கும் வீடு இதுதான். பிதுர்ரார்ஜித சொத்துக்கள் உயில்கள்,இன்சுரன்ஸ்  போனஸ்,ஆகியவைகளை குறிக்கும் வீடு இதுதான் ஒருவரின் மரணம் இயற்கையானதா  துர்மரணமா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம் துன்பம்,துக்கம்,தோல்வி தண்டனை தடைகள் ஜெயில் தண்டனை இவைகளையும் அறியும் வீடு இதுதான் இந்த வீட்டை :"துஸ்தானம்"என்று கூறுவார்கள்.


ஒன்பதாம்வீடு; தகப்பனார் ,போன ஜென்மத்தில்ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள்,பாவங்கள்,நீண்ட பயணம்,தெய்வ தரிசனம்,செய்தால் உயர்கல்வி முன்பின் தெரியாதவர்கள்,ஆகியவற்றை குறிப்பது இந்த வீடுதான்.


       பத்தாம்வீடு;ஒருவரின் ஜீவனம், கெளரவம் சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை இந்தவீட்டை கொண்டுதான் சொல்லலாம் தொழிலில் முன்னேற்றம்,பதவி உயர்வு அரசியல் ஆகியவற்றையும்இதை கொண்டேதான் சொல்லலாம்   இதை "கர்மஸ்தானம்" என்றும் கூறுவார்கள் தயார்,தகப்பனுக்கு செய்யும் கர்ம காரியங்களையும் இந்தவீட்டை கொண்டு சொல்லலாம்.


பதினொன்றாம் வீடு;இதை "லாபஸ்தானம்"என்றுகூறுவார்கள்  நமக்கு வரகூடிய லாபங்களையும்,சுகங்களையும் அளிக்க கூடியது மூத்தசகோதர்களை பற்றியும்   எந்தவீட்டை வைத்து கூறலாம்..நண்பர்களையும்,  வாழ்கையில் என்ன மிச்சம் என்பதையும் இந்த வீட்டை வைத்துதான் கூறலாம்.


   பணிரண்டாம்வீடு ;இதை "மோட்ச ஸ்தானம்" என்றும்,"விரைய' ஸ்தானம் என்றும் கூறலாம் நமக்கு வரக்கூடிய செலவுகள்,நஷ்டங்கள்,எல்லா வற்றையும்  கூறலாம். துன்பம் பாவம்,வறுமை,துரதிஷ்டம்,மறைமுக எதிரிகள்,ஜெயில்வாசம்.கடன்திருப்பிகொடுப்பதையும்,முதலீடு செய்வதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம்.


     சரி நண்பர்களே,,,,,,!இதுவரை லக்கண காரதுவத்தை பார்த்தோம்  இனி வரும் பதிவுகளில் மேஷம் முதல் மீனம் வரையிலான லக்கனபலன்களை 

விரிவாக பார்ப்போம்,,,,,      

 .

 


Friday, 23 August 2013

நல்ல சுபாவம் கொண்ட "ரேவதி"நட்சத்திரகாரர்களே,,,,,,!!!

   வான்மண்டலத்தில் ரேவதி  நட்சத்திரமானது  வியாழன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே நல்ல சுபாவம் உடையவராகவும் கொண்ட நட்சத்திரமாகும்

                 நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், , நல்ல சுபாவம் உடையவராகவும், பணக்காரராகவும், நன்னம்பிக்கையும், அறிவாற்றலும் படைத்தவராகவும், நியாயமான வழிகளில் பணம் சம்பாதிப்பவராகவும் நீங்கள் விளங்குவார்கள். நீங்கள், வயதில் பெரியவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பணிந்து நடப்பதுடன், மரியாதையும் அளிக்கிறீர்கள். நீங்கள் இந்த குந்த் முல நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், பூஜை செய்திடவேண்டும். உங்கள் 17, 21, மற்றும் 24 ஆம் வயதை எட்டும்போது , நல்ல அதிருஷ்டத்தைப் பாக்கலாம் காரணம் சந்திரனுக்கும் ரேவதிக்கும் சிவபார்வதி காட்சி கொடுத்ததால் இது ரேவதி நட்சத்த்திர தலமாக விளங்குகிறது. 

          இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் திருச்சி மாவட்டம் காருகுடி  (இவ்வூர் திருச்சியிலிருந்து  நாற்பது  கிலோமீட்டர் உள்ள  முசிறி அங்கிருந்து   தத்தய்யங்கார் பேட்டை  சென்று 21  கிலோமீட்டர்தூரத்தில் கருக்குடி உள்ளது இங்குதான் சிவன் "கைலாசநாதராக''அருள்பாலிக்கிறார்.

     

              இந்த நட்சத்திரதலத்தில் ரேவதி நட்சத்திர நாளன்று   இத்தலத்தில்27  எண்ணிக்கை வரும்படி2 7 திருமாங்கல்ய சரடு 27 ரவிக்கை துணி 27 பொட்டலங்களாக கட்டி சிவனுக்கும் பார்வதிக்கும் சமர்பித்து கோவிலுக்கு கோவிலுக்கு வருவோருக்கு கொடுத்தால் தடைபட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும் ரேவதி நட்சத்திரம் முடியும் நேரத்திலும் அஸ்வினி நட்சத்திரம் ஆரம்பமாகும் நேரத்திலும் பால் அபிசேக செய்து   வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும்.

Tuesday, 20 August 2013

எதிரிகளை ஒடுக்கிவெற்றிகொள்ளும்திறன் படைத்த""உத்திரட்டாதி'" நட்சத்திரகாரர்களே,,,,,!!!

                   
           வான்மண்டலத்தில் உத்திரட்டாதி நட்சத்திரமானது  வியாழன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே தாராள சிந்தையுடையவராக கொண்ட நட்சத்திரமாகும்


            இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், ஒரு சிறந்த மேடைப் பேச்சாளராகவும், மகிழ்ச்சி நிறைந்தவராகவும், நற்குணமும், எதிரிகளை ஒடுக்கி வெற்றி கொள்ளும் திறனும் மிக்கவராகவும் விளங்குவார்கள். , தாராள சிந்தையுடையவராகவும், செல்வவளமும், அறிவாற்றலும் நிறைந்தவராகவும் இருப்பர்கள். உங்களுக்கு கவர்ச்சிகரமான, வசீகர உடற்கட்டு இருக்கும். உங்களுக்கு குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் இருப்பார்கள். உங்கள் வாழ்க்கையில், 27, 31 ஆம் வயதில்தான், நல்ல அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள்காரணம்  தேவசிற்பி விஸ்வகர்மா ,அகிர்புதன் ,ஆங்கிரசர்,அக்னி புரந்தக மகரிசிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். 

          இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் புதுக்கோட்டை  மாவட்டம் தீயத்தூர்   (இவ்வூர் புதுக்கோட்டைளிருந்து நாற்பது  கிலோமீட்டர் உள்ள  அங்கிருந்துஆவுடையார் கோவில் சென்று திருபுவன வாசல் செல்லும் வழியில் 21  கிலோமீட்டர்தூரத்தில் தீயத்தூர் உள்ளது இங்குதான் சிவன் "சகஸ்ரலக்ஷ்மீஸ்வரராக'அருள்பாலிக்கிறார்.
     
              இந்த நட்சத்திரதலத்தில் உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று   இத்தலத்தில் அபிசேக ஆராதனைசெய்து வழிபட்டு ஹோமம் செய்து சக்கரை பொங்கல் நெய் வேதியம் செய்து வழிபட்டால் பணகஷ்டம் தீரும் தடைபட்ட காரியம் நடக்கும் என்பது நன்பிக்கை.

Saturday, 17 August 2013

திடமான மனமும் உடல்வலிமையையும் கொண்ட"பூரட்டாதி"நட்சத்திரகாரர்களே,,,,,,,!!!

   வான்மண்டலத்தில் பூரட்டாதி  நட்சத்திரமானது சனி மற்றும் வியாழன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே திடமான மனமும் உடல் வலிமையையும் கொண்ட நட்சத்திரமாகும்.

         இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், பணம் சம்பாதிப்பதில் வெற்றி காண்பார்கள் அதிகமாகப் பேசக்கூடியவர்கள், நன்கு படித்தவர் தேர்ச்சிபெற்றவர். நண்பர்களுடன் நல்ல உறவுகள் இருந்து வரும். தெளிவாகப் பேசுவர்கள். இவர்கள்  வாழ்க்கைத் துணை, பெரும்பாலும் ஒரு பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவராக இருப்பார். , வெகு எளிதில், எதிர்பாலைச் சேர்ந்தவர்களால் ஈக்கப்படுகிறீர்கள். குழந்தைகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள். உங்களுக்கு, நல்ல, உடல்கட்டு இருக்கும்.காரணம்  "காலபைரவர்'' பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளை படைத்தார். 

          இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ரங்கநாதபுரம்  (இவ்வூர் திருவையாதிளிருந்து 1 7 கிலோமீட்டர் திருக்காட்டுப்பள்ளி அங்கிருந்து அகரபேட்டைசெல்லும் வழியில்  2 கிலோமீட்டர்தூரத்தில்  ரங்கநாதபுரம் உள்ளது இங்குதான் சிவன் "திருவனேஸ்வரராக'அருள்பாலிக்கிறார்.

     இந்த நட்சத்திரதலத்தில் பூரட்டாதி நட்சத்திர நாளன்று   இத்தலத்தில் அபிசேக ஆராதனைசெய்து வழிபட்டு வந்தால் குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள்குழந்தைபேறு பெறலாம் இங்குஏழைகளுக்கு  ஏழுவகையான வண்ண ஆடைகளை தானம்செய்தால் ஏழேழு ஜென்ம பாவங்கள் தங்கள் தலைமுறையை தொடராமல் விலகும்  என்பது நன்பிக்கை.

Monday, 5 August 2013

விசாலமானசிந்தனையுடன்செயல்படும் "சதயம்" நட்சத்திரகாரர்களே,,,,,,!!!

  வான்மண்டலத்தில் சதயம் நட்சத்திரமானது சனி கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே விசாலமான சிந்தனையுடன் செயல்படும் வல்லமையமையும் வசீகரமான தோற்றமும் கொண்ட நட்சத்திரமாகும்.


       இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  தர்மசிந்தை உடையவராகவும், செல்வவளமும், தாராள மனமும், சுயேச்சையான கருத்தும், புத்திசாலித்தனமும், அறிவாற்றலும் நிறைந்தவராகவும் விளங்குவர்கள்.  பகைவர்களை ஒடுக்கி வெற்றி காண்பர்கள்.  பலரும், மதித்து மரியாதை காட்டுவார்கள்  நல்ல அந்தஸ்தும் அதிகாரமும் இருக்கும். நீங்கள் எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகச் சொல்லிவிடக் கூடியவர் ஆனால் உண்மை பேசுபவர்/   காரணம் இத்தலத்தில் திருநாவுக்கரசருக்கு  சித்திரை "சதயம்"  நட்சத்திரநாளில் இறைவன் முக்தி கொடுத்தரர் 


     இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் திருவாரூர் மாவட்டம் திருப்புகலூர் (இவ்வூர் நன்னிலத்திளிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 1௦ கிலோமீட்டர்தூரத்தில்  திருப்புகலூர் உள்ளது இங்குதான் சிவன் அக்னிபுரீஸ்வரராகஅருள்பாலிக்கிறார்.


     இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் வரும் சதயம் நட்சத்திர நாளில் இத்தல இறைவனை வழிபாடு செய்தால் ஆயுள்விர்த்தி ஆரோக்கியம் நற்பண்புகள் உண்டாகும். 


Sunday, 28 July 2013

தாராள சிந்தையும், செல்வவளமும் பெற்ற"அவிட்டம்" நட்சத்திரகாரர்களே,,,,,!!!

                 வான்மண்டலத்தில்"அவிட்டம்" நட்சத்திரமானதுசனி கிரகத்தின்ஆதிக்கம்கொண்டநட்சத்திரமாகும்இந்த நட்சத்திரமானதுஇயற்கையாகவே" தாராளசிந்தையும், செல்வவளமும்பெற்ற நட்சத்திரமாகும்
      

            இந்தநட்சத்திரத்தில்பிறந்தவர்கள்இசையில்ஆழ்ந்த விருப்பம்கொண்டிருப்பீர்கள். தாராளசிந்தையும், செல்வவளமும், நல்லதீரஉணர்வும்கொண்டவராகநீங்கள் விளங்குவர்கள். பிறர்உங்களைமதித்துமரியாதை, தருவார்கள்உங்கள்கணவன்/மனைவிஉங்களைமிகவும் விரும்பிநேசிப்பார். நீங்கள்தைரியமானவராகஇருப்பார்கள் உங்கள்சகோதரர்கள்மற்றும்உறவினர்களை, நீங்கள்மிகவும் விரும்பிஅன்புகாட்டுவீர்கள். பிரமனுக்குஅவிட்டம் நட்சத்திரதினத்தில்ஞானம்கிடைத்தது.
 
 இந்தநட்சத்திரத்தில்பிறந்தவரதஞ்சாவூர்மாவட்டம்கீழ் கொருக்கை,கும்பகோணம்மகாமகக்குலம் மேற்குகரைலிருந்துநான்குகிலோமீட்டர்தூரத்தில்கீழ் கொருக்கைஇவ்வூரில்சிவன்"பிரம்ம ஞானபுரீஸ்வரராக"அருள்பாலிக்கிறார்'

   
      இந்தநட்சத்திரத்தில்பிறந்தவர்கள்தங்கள்நட்சத்திர தினத்தன்றுஇங்குவந்துவழிபாடுசெய்தால்திருமணதடை குடும்பஒற்றுமைவளரவும்மாணவர்களுக்குகல்விமுந்திரி பருப்புநிலக்கடலைமாலைகட்டிவெளிமண்டபத்தில்உள்ள இரட்டைநந்திக்குஅணிவித்துபிராத்தனைசெய்தால் நினைத்ததுநடக்கும். . 

Monday, 15 July 2013

"அதீதமான, நல்லசக்திவாய்ந்த "திருவோணம்" நட்சத்திரகாரர்களே,,,,,!!!

 வான்மண்டலத்தில் "திருவோணம்" நட்சத்திரமானது சனி கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே "அதீதமான, நல்ல சக்திவாய்ந்த" உள்ளுணர்வு பெற்ற நட்சத்திரமாகும்  


      இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , நல்ல சுபிட்சத்தோடும், படித்தவராகவும், புத்திசாலியாகவும் விளங்குவார்கள். இசை, ஜோதிடம், கணிதம் - ஆகியவற்றில் உங்கள் மிகுந்த ஆர்வம் இருக்கும். உங்கள், அதீதமான, நல்ல சக்திவாய்ந்த உள்ளுணர்வு ஒன்று இருக்கும். இவர்களுக்கு கவர்ச்சிமிக்க, தாராள மனம் படைத்த மனைவி/கணவன் கிடைப்பார்கள் பிறருக்கு உதவி செய்யும் எண்ணமும் செல்வாக்கும் நிறைந்திருக்கும் சந்திர பகவான்ஒரு சாபத்தினால் இருளடைந்து இருந்தார் அவரது மனைவியரில் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி சாபவிமோசனம் பெற்றுத்தந்தார்.

   

   இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலூர் மாவட்டம் திருபாற்க்கடல் இவ்வூர் வேலூர் t o  சென்னை செல்லும் வழியில் வேலுரிளிருந்து 2௦  கிலோமீட்டர்தூரத்தில் காவேரிபாக்கம் அதிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் திருபாற்க்கடல் பிரசன்னா வெங்கடேச பெருமாள் உள்ளது.


      

      இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ,தங்கள் நட்சத்திர தினத்தன்றோ அல்லது மூணாம்பிறை அன்றோ இத்தல பெருமாளுக்கு அபிசேக ஆரதனை செய்துவழிபட்டால் நினைத்தது நடக்கும் மாணவர்களுக்கு கல்வி செல்வமும் செழித்து ஓங்கும். 

Sunday, 7 July 2013

மிகுந்ததந்திரபுத்தியுடைய ""உத்திராடம்" "நட்சத்திரகாரர்களே,,,,,,,!!!

 வான்மண்டலத்தில் உத்திராடம் நட்சத்திரம் வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற கோளாகும் இந்த நட்சத்திரமானது மிகுந்த தந்திரம் கொண்ட நட்சத்திரமாகும்.

    இந்த நட்சத்திரத்தில் பிறந்திருதால், கடமைப்பற்றுடன் கீழ்ப்படிந்தும், நல்ல குணம் படைத்தவராகவும், பல நண்பர்களைக் கொண்டவராகவும்   நன்றியுடையவராகவும், அன்புள்ளம் நிறைந்தவராகவும் இருப்பதுடன், உங்களுக்கு கிடைத்த உதவிக்கு நன்றிக் கடனும் , மிகுந்த தந்திர புத்தியுடைய சாமர்த்தியசாலியாகவும், முயற்சியில் வெற்றி காண்பவராகவும் விளங்குவார்கள். இவர்களுக்கு பல செல்வந்தர்களைத் தெரிந்திருக்கும் இவர்கள் முதலாளிகள் மதித்து மதிப்புக் கொடுப்பார்கள். இசையிலும் நடனத்திலும் இவர்களுக்கு அபார ஆசை இருக்கும்.
     
                இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகிலுள்ள பூங்குடி இவ்வூர் சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 12 கிலோமீட்டர்தூரத்தில் ஒக்கூர்அதிலிருந்து 3 கிலோமீட்டர்  தூரத்தில் கீழப்பூங்குடி உள்ளது. இங்குதான் சிவன் பிரம்ம புரீஸ்வரராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
       
                இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர தினத்தில் மற்றும் பவுர்ணமி சித்திரை பிறப்பன்றும் சிறப்பு பூஜை நடைபெறும்.திருமண தடை உள்ளவர்கள்,இங்குள்ள மீனாட்சிஅம்மனை வணங்கிவழிபட்டு வந்தால் திருமண தடை நீங்கி வாழ்வில் வளம் பெறலாம்.   

Friday, 28 June 2013

கடுமையானபோக்குகொண்ட"பூராடம்'" நட்சத்திரகாரர்களே,,,,,!!!

வான்மண்டலத்தில் 'பூராடம்" நட்சத்திரமானது கடுமையான போக்கு கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரம் வியாழன் கிரகத்தின் ஆதிக்கமும் குணமும் கொண்ட நட்சத்திரமாகும்.

       இந்த நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் சுகபோகவாழ்கை நடத்துவார் எப்போதும் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வார் பிடிவாதகுணம் கடுமையாக பேசும் சுபாவம் இவர்களிடம் உண்டு வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர்கள் அனைத்து தேவதைகள் வாஸ்துபகவான்களும் இவர்களது நட்சத்திர தலத்தில் வழிபாடு செய்வதாக ஐதீகம் 

 இச்சிசறப்பு பெற்ற திருச்தலம் தஞ்சாவூர்மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள'கடுவெளி" இந்த ஊர் திருவையாறுரிலிருந்து கல்லனை செல்லும் வழியில் நான்குகிலோமீட்டர் தூரத்தில் இந்த ஊரை அடையலாம் இந்தஊரில்தான் சிவன் "ஆகாசபுரீஸ்வரராக'அருள்பாலிக்கிறார் 

          இந்த நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் இந்த ஸ்தல இறைவனை புனுகு ,ஜவ்வாது ,சாத்தி கேசரி நைவேத்தியம் செய்து வணங்கி தங்கள் நட்சத்திர நாளில் சாமி சன்னதியில் சாம்ராணிபுகையிட்டு வழிபாடு செய்யலாம் இது கடுவெளி சித்தரின் அவதார ஸ்தலம் இது. 

Tuesday, 25 June 2013

"ஆஞ்சநேயருக்கு" நிகரானபலம்பெற்ற "மூலம்"நட்சத்திரகாரர்களே,,,,,,!!!

 வான்மண்டலத்தில்மூலம்நட்சத்திரமானது வியாழன் கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம் இந்த மூலம்நட்சத்திரமானது மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் ஒரு நட்சத்திரமாகும்.

        மூலம்நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் சோம்பல் என்பதே இல்லாமல் சுறுசுறுப்பாக துறுதுறு என்று இருப்பார்கள் கல்வியில்ஞானமும் உடல் அழகும் பார்பதற்கு லட்சனமும் பொருந்தியவராக இருக்கும் இவர்கள் உணவு விசியத்தில் அக்கறையும்கொண்டவர்களாக இருப்பார்கள்பழங்களையும்புசிப்பார் உடல் வலிமை பெற்று இருப்பார்கள் இதற்குகாரணம் ஆஞ்சநேயர் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கலைமகளாகிய அந்த சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே.

    இச்சிறப்புபெற்ற ஸ்தலம் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு (இந்த ஊர் சென்னை இலிருந்து தக்கோலம் செல்லும் வழியில் சுமார் நாற்பத்தி ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது) இங்கு சிவன் லிங்கமாய் "சிங்கீஸ்வரராக" அருள்பாலிக்கிறார்

      

          மூலம்நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்  தங்கள் நட்சத்திர நாளில் இத்தலத்தில் பிராத்தனை செய்தால் இசைத்துறையில் பிரகாசிக்கலாம் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்  எலும்புகள் நோய்களும் குணமாகும் 

                

Friday, 21 June 2013

துணிச்சல்மிகுந்த"கேட்டை" நட்சத்திரகாரர்களே,,,,,,!!!

  வான்மண்டலத்தில்கேட்டைநட்சத்திரமானதுசெவ்வாய் கிரகத்தின்ஆதிக்கம்பெற்றகோளாகும்'"கேட்டையில்பிறந்தவர்கள்கோட்டைகட்டிஆளலாம்"என்றபழமொழிக்குஏற்ப கேட்டைநட்சத்திரமானதுதுணிச்சல்குணம்நிறைந்தநட்சத்திரமாகும்.

    கேட்டைநட்சத்திரத்தில்பிறந்தவர்கள்கல்வியில்தேர்ச்சி  கொண்டவராகவும்தைரியமும்துணிச்சலும் இயல்பாகவேஇருக்கும்அழகாகவும்சுருக்கமாகவும்பேசும் திறன்படைத்தவர்எந்தகரியத்தையும்நடத்திகட்டும் சாமர்த்தியமும்கோபம்அதிகமும்அடுத்தவரிடத்தில்பண்பும் நிறைந்துகாணப்படுவார்கள். பெரியநம்பிகள்மார்கழிமாதம் கேட்டைநட்சத்திரத்தில்அவதரித்தார்இவருக்குமாதங்களில் கேட்டைநட்சத்திரதினத்தன்றுபூஜைஉண்டு 

         இச்சிறப்புபெற்றஸ்தலம்தமிழகத்திலுள்ள தஞ்சாவூர்மாவட்டம்பசுபதிகோவில்(தஞ்சாவூர்லிருந்து கும்பகோணம்செல்லும்வழியில்சுமார் 13  கிலோமீட்டர்தூரத்தில்)"வரதராஜப்பெருமாள்"அருள் பாலிக்கிறார்.  

          கேட்டைநட்சத்திரத்தில்பிறந்தவர்கள்நட்சத்திரதினம் மற்றும்செவ்வாய்க்கிழமைநாட்களில்கேட்டை நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்ஜாதகம்தோஷம்நீங்க  வேண்டிகொள்ளலாம். மருதாணி,கரிசலாங்கண்ணி செம்பருத்திஇலைகளில்ஆனாதீபமேற்றிவழிபடுவதுசிறப்பு. 

Monday, 17 June 2013

மேன்மையானபதவிகளைஅடையும் '"அனுஷம்" நட்சத்திரகாரர்களே,,,,,!!!

                                   

  வான்மண்டலத்தில்அனுஷம்நட்சத்திரமானதுசெவ்வாய் கிரகத்தின்ஆதிக்கம்பெற்றகோளாகும்அனுஷம் நட்சத்திரமானதுஇயற்கைலேயேமேன்மைகுணம்நிறைந்த நட்சத்திரமாகும்.

         அனுஷம்நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்உற்றார் உறவினர்களிடம்அன்புகொண்டவராகவும்எப்போதும் செல்வாக்குடன்மேன்மையானஅரசாங்கபதவிகளை வகிப்பார்கள்.பாராட்டும்பரிசும்கிடைக்கும்மற்றவர்களை சுத்ரித்துநடந்துகொள்வர்ஊர்சுற்றுவதில்விருப்பம் கொண்டிருப்பார்கள்வெளிப்படையாகபேசும் மனம் இல்லாதிருப்பார்கள் 

         

  இச்சிறப்புபெற்றஸ்தலம்தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம்மாவட்டம்திருநின்றியூர்இவ்வூரில்தான்சிவன்  (மயிலாடுதுறைலிருந்துசீர்காழிசெல்லும்வழியில்சுமார்7 கிலோமீட்டர்தூரத்தில்)"மகாலட்சுமிபுரீஸ்வரரக"அருள் பாலிக்கிறார்.  

                              

                                                

  அனுஷம்நட்சத்திரத்திலபிறந்தவர்கள்தங்கள்நட்சத்திர தினம்மற்றும்செவ்வாய்க்கிழமைநாட்களில்மற்றும்அனுஷம் நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்ஆண்கள்என்றால்துவாதசி திதியும் பெண்களானால்வரலக்ஷ்மிநோம்புஅன்றுஇத்தல "மகாலட்சுமிபுரீஸ்வரருக்குசந்தனகாப்பிட்டுமாதுளை முத்துக்களைஅதில்பதித்து வழிபட்டுடால்நோய்நொடி இல்லாதவாழ்வையும்செல்வசெழிப்பு ஏற்படும்,அம்மாவாசைதினங்களில்முன்னோர்கள்ஆத்மா சாந்தியடையவேண்டிகொள்ளலாம்.

Friday, 14 June 2013

சாமர்த்தியம்...பெற்ற"விசாகம்" நட்சத்திரகாரர்களே.....!!!

            வான்மண்டலத்தில் விசாகம் நட்சத்திரமானது வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம்பெற்ற கோளாகும் விசாகம்நட்சத்திரமானது இயற்கைலேயே சாமர்த்தியம் பெற்ற நட்சத்திரமாகும்.
       

            விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சமய பற்றும் தெய்வபக்தி கொண்டவராகவும் பொறாமையும் நட்பில்ல பகைமைஉணர்சியும்
காணப்படுவார்கள் வியாபாரத்தில் ஈடுபாடு நடக்கததையும் நடத்திக்காட்டும் சாமர்த்தியமும் கலைகளில் ஆர்வமும் தன்னைபற்றி தானே புகழ்ந்து கொள்ளும் தன்மையும் தான தர்மம் காரியங்களில் தாராளமனமும்  இவர்களிடம் நிறைந்திருக்கும்
         

                  இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் தமிழகத்திலுள்ள திருநெல்வேலிமாவட்டம் பண்பொழி(செங்கோட்டைலிருந்து சுமார் 7 கிலோமீட்டர்தூரத்தில்)திருமலைகோவில் அமைந்துள்ளது 

                  விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர தினம் மற்றும் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை நாட்களில் மலையேறி இத்தல முருகனை வழிபட்டு அபிசேக ஆராதனை செய்தால் வாழ்வு திருப்புமுனையாகஅமையும் என்பது சித்தர்களின் வாக்கு.

Tuesday, 11 June 2013

புத்தி கூர்மை பெற்ற "சுவாதி" நட்சத்திரகாரர்களே,,,,,

                           
வான்மண்டலத்தில் 'சுவாதி ' நட்சத்திரம்  வெள்ளி கிரகத்தின் ஆதிக்கம்  பெற்ற நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கைலேயே மிகுந்த புத்தி கூர்மை பெற்ற நட்சத்திரமாகும்.
     
                  இந்த 'சுவாதி'  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  இதற்குகாரணம் இந்நட்சத்திரதலத்தில்  நல்ல அழகிய தோற்றத்துடனும், மகிழ்ச்சியான சுபாவத்துடனும், சமயப்பற்று இருக்கும் தர்ம காரியங்களுக்காக நன்கொடை அளிப்பார்கள். நீங்கள், உங்கள் உணர்ச்சிவெறிகளை கட்டுப்படுத்தி வைத்திடும் ஆற்றல் பெறுவார்கள் ஆனால் விரகதாபத்தைப் (உணர்ச்சி வேட்கையை) பொறுத்துக்கொள்ள, இயலாது. வியாபாரத்தில் தேர்ச்சி பெற்றவராக விளங்குவதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் நல்லுறவுகளைப் பராமரிப்பார்கள்.  

         
                       இவ்வளவு சிறப்புபெற்றஸ்தலம் தமிழகத்தின் சென்னை பூந்தமல்லி அருகிலுள்ள சித்துகாடு(இது தண்டுதரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் சுமார் எட்டு கிலோமீட்டர்தூரத்தில்)  எனும் ஊர் உள்ளது. இவ்வூரில்தான் 'தாத்திரீஸ்வரர்"அருள் பாலிக்கிறார்.
    
                          சுவாதி  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர நாட்களில் , இத்தலத்தில் உள்ள"இறைவனையும் இத்தலத்தில் உள்ள குபேரனுக்கு நெல்லிக்காய்ஊறுகாயுடன்தயிர்சாதம் புளியோதரையும் படைத்து அதை அங்குள்ள ஏழை எளியவற்கு தானம்செய்தால் வாழ்வில் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்  வணங்கி வலம்வந்தால் திருமணதடைநீங்கும்,இருதய நோயாளிகள் நெய் தீபமேற்றிவழிபட்டால் நல்ல வழிகாட்டுதலுடன் குணமாகும்,என்பது ஐதீகம். .    

Monday, 10 June 2013

அறிவாற்றல்,,,,,! பெற்ற 'சித்திரை" நட்சத்திரகாரர்களே,,,,,!!!

          
             வான்மண்டலத்தில் சித்திரை  நட்சத்திரம் புதன் கிரகத்தின் ஆதிக்கம்மற்றும் வெள்ளி கிரகத்தின் ஆதிக்கமும்  பெற்ற நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கைலேயே மிகுந்த அறிவாற்றல்  பெற்ற நட்சத்திரமாகும்.
     இந்த சித்திரை  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாற்றல்மிகுந்தவராகவும்வைத்தியம் ,ஜோதிடத்தில் நல்ல ஆர்வமும் சமய பற்றும் ,கொண்டவராகவும் தெய்வபக்தியும் உழைப்பின் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பார், ஆடை ஆபரணங்களில் பிரியமும்,கல்வியில் ஆர்வமும் ,   கட்டுமான தொழிலில் நுணுக்கமும் கொண்டிருப்பார்இதற்குகாரணம்
                         
          இந்நட்சத்திரதலத்தி ல் குரு பகவான் பிரகல்பதிக்குசித்திரை மாதம்சித்திரைத்தன்று சித்திரை தேரில் எழுந்தருளி காட்சிதந்தார்.
         
       இவ்வளவு சிறப்புபெற்றஸ்தலம் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை  எனும் ஊர் உள்ளது. இவ்வூரில்தான் 'சித்திர ரத வல்லபபெருமாளாக"அருள் பாலிக்கிறார்.
      
                                     சித்திரை  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர நாட்களில்,மற்றும் வியாழகிழமை,பவுர்ணமியன்று, இத்தலத்தில்      உள்ள"இறைவனையும்,வணங்கி வலம்வந்தால் திருமணதடைநீங்கும்,குழந்தைபாக்கியம்கிடைக்கும் நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி வாழ்வில் வளம்பெறுவோமாக.   

Thursday, 6 June 2013

'"விவேக'" மிகுந்த,,,"ஹஸ்தம்",,,நட்சத்திகாரர்களே,,!!!

        வான்மண்டலத்தில் 'ஹஸ்தம்' நட்சத்திரம் புதன் கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கைலேயே மிகுந்த வல்லமை பெற்ற நட்சத்திர வளிமண்டலமாகும்.

    இந்த ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விவேக மிகுந்தவராகவும்,எப்போதும் எதிலும் தாரளமனம்கொண்டவராகவும் பலரால் விரும்பி நேசிக்கபடுபவர்கள்,துறவிகளிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பார், ஆடை ஆபரணங்களில் பிரியமும்,கல்வியில் ஆர்வமும் கலைகளில் ரசிப்புத்தன்மையும் வாயடிதனமாகவும்,    தயார்மீது அலாதிபிரியமும் கொண்டிருப்பார் இதற்குகாரணம் இந்நட்சத்திரதலத்தில் சித்தர்களும்,முனிவர்களும்,மகான்களும் அரூபா வடிவில் இத்தல இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.

         இவ்வளவு சிறப்புபெற்றஸ்தலம் தமிழகத்தின் நாகபட்டினம்மாவட்டம் கும்பகோணம்t o மயிலாடுதுறைசெல்லும் வழியில் குத்தாலம் பிரிவிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர்தூரத்தில் கோமல் எனும் ஊர் உள்ளது. இவ்வூரில்தான் சிவன் "கிருபா கூபரேஸ்வரர்" (எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர்) ராக அருள் பாலிக்கிறார்.

     ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர நாட்களில்,மற்றும் திங்கள்கிழமை,புதன்கிழமை,நாட்களில் இத்தலத்தில் உள்ள 'கிருபாகூபரேஸ்வரர்"இறைவனையும் அன்னபூரணியும் வணங்கி வலம்வந்தால் திருமணதடைநீங்கும், ,குழந்தை பாக்கியம் கிடைக்கும்நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி வாழ்வில் வளம்பெறுவோமாக.   

Tuesday, 28 May 2013

கருணைஉள்ளம்கொண்ட"உத்திரம்' நட்சத்திரகாரர்களே,,,,,,!!!

       வான்மண்டலத்தில்நாம் பார்க்க இருப்பது உத்திரம் நட்சத்திரம் இந்த நட்சத்திரமானதுசூரியன் மற்றும் புதன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்டு செயல்படும் நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையிலேயே நன்னடத்தை கொண்டநட்சத்திரவளிமண்டலமாகும்.

          உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் நிறைந்தவர்கள், எதையும் பொறுமையுடன் எதையும் சாதிப்பார்கள், நான்னடத்தை கொண்டவராகவும், பலராலும் விரும்பி நேசிக்கபடுபவர்கள், சொந்த சம்பாத்தியத்தில் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பபீர்கள்,வாக்கு நாணயம் தவறாத குணம் கொண்டவராகவும் தெய்வபக்தி கொண்டவராகவும் இருப்பார்கள்.காரணம் இந்த நட்சத்திரத்தில் மாங்கல்ய மகரிஷி அவதரித்தார் அகத்தியர்,வசிஷ்டர்,பைரவர் ஆகிய மகரிசிகளின் திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை  நிகழ்த்தியவர்.
          

       இவ்வளவு சிறப்புபெற்ற இந்த ஸ்தலம் தமிழகத்திலுள்ள தஞ்சாவூர்மாவட்டம் லால்குடி அருகிலுள்ள இடையாற்றுமங்களம் என்ற ஊரில்"மாங்கல்யேஸ்வரர்"   ஆலயம் அமைந்துள்ளது. திருச்சி லால்குடிலிருந்து 5 கி /மி தூரத்தில் இடையாற்றுமங்களம் உள்ளது..இக்கோவில் செல்ல பஸ் வசதி உள்ளது.
           

      உத்திர நட்சத்திரகாரர்கள் திருமண தடைகள் உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர தினத்தில் சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.மேலும்   முப்பிறவியில் செய்த கர்மவினைகள் நீங்கி வாழ்வில் வளம்பெறலாம்.

        

Friday, 17 May 2013

ஒழுக்கம்,தைரியம், மனம் கொண்ட 'பூரம்" நட்சத்திரகாரர்களே,,,,,,!!!



       வான்மண்டலத்தில் 'பூரம்' சூரிய கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற கோள்களாகும். இந்த கோள்களானதுநல்ல தன்மைகுணம் கொண்ட நட்சத்திரகோளாகும்.
   
        பூரம்  நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் எதையும் ஒழுக்கம்,தைரியம்  மனம் கொண்டவர்களாக இருப்பார்கள், தான தர்மம்,காரியங்களில் முழுமையான ஈடுபாடுகொண்டு இருப்பார்கள்,எப்போதும் நீதி நேர்மையுடன்  திகழ்பவர் விவசாயத்தில் நாட்டமும்  நிறைந்திருக்கும் ஏன்எனில் இந்த நட்சத்திர தலத்தில் சிவதீர்த்தம்,நாகதீர்த்தம்,ஞான பிரம்மா தீர்த்தம்,இந்திர தீர்த்தம்,ஸ்ரீ தீர்த்தம்,ஸ்கந்ததீர்த்தம்,குரு தீர்த்தம், எனும் ஏழுதீர்த்தம் இருப்பதால் இந்த நட்சத்திர தலத்தின்சிறப்பு.
                
   இவ்வளவு சிறப்புபெற்றஸ்தலம் தமிழகத்திலுள்ள புதுக்கோட்டைத to பட்டுகோட்டைசெல்லும் வழியில்[ 7  கிலோமீட்டர்தூரத்தில் அமைந்துள்ளது] .ஸ்ரீ ஹரிதீதேஸ்வரர் " ஆலயம்.ஆகும்
     
     இந்த நட்சத்திரதலத்தில் பூராநட்சத்திர நாளன்று   இத்தலத்தில் அபிசேக ஆராதனைசெய்து வழிபட்டு வந்தால் குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள்குழந்தைபேறு பெறலாம் இதற்கு ஆடிபூரம்உகந்த நாளாக கருதபடுகிறதுமேலும் முப்பிறவியில் செய்த கர்மவினைகள்நீங்கி வாழ்வில் வளம் பெறுவோமாக,,,,,,

Thursday, 16 May 2013

"ஜெகத்தினை"ஆளபிறந்த,,,,"மகம்" நட்சத்திரகாரர்களே,,,,,!!!

   வான்மண்டலத்தில்'மகம்"'நட்சத்திரமானதுசூரிய கிரகத்தின் ஆதிக்கம்பெற்றகோள்களாகும். இந்த கோள்களானதுஎதிலும்சாமர்த்தியமும்,சாதுர்த்தியமும் கொண்டநட்சத்திரகோளாகும்
   
        மகம்நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்எதையும்ஆராய்ந்து செய்யும்மனம்கொண்டவர்களாகஇருப்பார்கள், தான தர்மம்,காரியங்களில்முழுமையானஈடுபாடுகொண்டு இருப்பார்கள்,எப்போதும் நீதி நேர்மைஎன்றுதனக்குள்ஒரு வரைமுறைகள்அதற்குதக்கவாறுவாழும்கௌரமான மனிதனாகதிகழ்பவர்பேச்சுக்களில்சாதுர்த்தியமும் தன்நம்பிக்கையும்நிறைந்திருக்கும்ஏன்எனில்இந்தநட்சத்திர தலத்தில்பரத்வாஜ்எனும்மகான்மகம் நட்சத்திரத்தில்பிறந்தவர்என்பதால்இந்தநட்சத்திரதலத்தில் மாதந்தோறும்சிறப்புபூஜைகள்நடைபெறுகிறதுஇந்த பூஜையைவழிபடபலமகரிஷிகள்பலமகான்கள்அருபவடிவில் வந்துகலந்துகொள்வதாகஐதீகம்.
    
                  இவ்வளவுசிறப்புபெற்றஸ்தலம்தமிழகத்திலுள்ள திண்டுக்கல்மாவட்டம்விராலிப்பட்டிபிரிவிலிருந்து2 கிலோமீட்டர்தூரத்தில்அமைந்துள்ளது"ஒடுக்கம்தவசி மேடைமாகாலிங்கேஸ்வரர்" ஆலயம்.
     
     இந்தநட்சத்திரதலத்தில்மகத்தில்பிறந்தால் ஜெகத்தைஆளலாம்'என்றபழமொழிக்குஏற்பமகான்பரத்வாஜைகுருவாககொண்டுமகம்நட்சத்திரநாள்மமற்றும்பஞ்சமிதிதி,சஷ்டிதிதி,ஏகாதசிதிதி,துவாதசிதிதி,பிரதோஷம்,மகாசிவராத்திரிஆகியதினத்தில்இத்தலத்தில்அபிசேகஆராதனைசெய்துவழிபட்டுவந்தால்வாழ்விலஉயர்ந்தநிலையைஅடையலாம்.         

   

Tuesday, 7 May 2013

செல்வந்தர்களாக,,,,!திகழும்,,,!!ஆயில்ய நட்சத்திரகாரர்களே,,,,,,!!

        வான்மண்டலத்தில் நாம் பார்க்க இருப்பது ஆயில்யம் நட்சத்திரம். இந்த நட்சத்திரமானது சந்திர கிரகத்தின் ஆதிக்கமும் குணமும் கொண்ட நட்சத்திரமாகும்,இந்த நட்சத்திரம்,இயற்கைலேயே மருத்துவ குணம் கொண்ட நட்சத்திரமாகும்.
     

       இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பெரியவர்களிடத்தில்மதிப்பும் மரியாதையும்,கொண்டவர்களாகவும்,செல்வந்தர்களாகவும்,இருப்பார்கள் நியாய தர்மங்கள் மற்றவர்களுக்கு போதிக்கும் குணம் நிறைந்திருக்கும் பணம் சம்பாதிக்கும் ஆர்வமும்,அதேபோல் செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாக திகழ்வார்கள் இவர்களுக்கு இயற்கைலேயே மருத்தவகுனம் நிறைந்திருக்கும் இந்த நட்சத்திரக்காரர்கள் தெய்வபக்தி நிறைந்திருந்தால் எதையும் சாதிக்கும் வல்லமையமையும் இந்த நட்சத்திர தலத்தில் சந்திரன் யோகா சந்திரனாக அருள் பாலிக்கிறார்
        இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் திருதேவன்குடி [நண்டு கோவில்] 'கற்கடஸ்வரராக"அமைந்துள்ள இக்கோவில் கும்பகோணத்திலிருந்து 11 வது கிலோமீட்டரில் சூரியனார் கோவில் செல்லும் வழியில் திரு வி ச நல்லூர் அங்கிருந்து பிரிவு ரோட்டில் 2 கிலோமீட்டர் சென்றால் திருதேவன்குடி இந்த ஸ்தலம் தான் ஆயில்யம் நட்சத்திரகாரர்களின் உகந்த ஸ்தலமாகும்.
      இந்த ஸ்தலத்தில் ஆயில்ய நட்சத்திரகாரர்கள்,  ஆயில்யம் நட்சத்திர நாள்,மற்றும் தேய்பிறை நாளில் இதல இறைவனுக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபட்டால் வாழ்வில் வளமும் மேன்மையும் அடையலாம் அம்மாவசை,மற்றும் சனிக்கிழமைகளில் இத்தலத்திலுள்ள அருமருந்து நாயகியை வழிபட்டு மருந்து சாப்பிட்டால் நோய் உடனே நிவாரனமாகும்.      

       

Tuesday, 30 April 2013

தெய்வபக்தி" மேலோங்கி நிற்கும்,,,! பூச நட்சத்திரகாரர்களே,!!

    வான்மண்டலத்தில் பூசம் நட்சத்திரமானது  சந்திர கிரகத்தின் ஆதிக்கமும் குணமும் கொண்ட ஒரு நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது சந்திரனின் முழுமையான ஆதிக்கம் பெற்றுப்பதால் இயற்கையாகவே நல்ல மென்மையுடன்எதிர்கொண்டு வெற்றிகொள்ளும்தன்மை கொண்ட நட்சத்திரமாகும்.

                  

      பூசம்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் பெரியவர்களிடத்தில் மரியாதையும்,மனதில் எப்போதும் தெய்வபக்தி மேலோங்கியும்,கவலைகளை மறந்து சிரிக்கும் பண்பையும் எடுத்தசெயலை வெற்றியோடு முடிக்கும் வைராக்கியமும் எப்போதும் புகழோடு வாழும் வல்லமையும் பெற்றுருப்பார்கள் மென்மையானகுணமும் இவர்களிடம்இயற்கையாகவே  இருக்கும் ஏன் எனில்பூசம்நட்சத்திரத்தில்வசிக்கும் பூசமருங்கர் எனும் சித்தர் சூர்யலோகத்திற்கும் பித்ரு லோகத்திற்கும் தினமும் சென்று வரும் அரியசக்தியுடைய 'பித்ருசாய்"எனும் காக்கைகளுக்கு சற்குரு வாகவிளங்கும் இவர் இத்தலத்தில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். 

 

     இச்சிறப்புப் பெற்ற இந்த ஸ்தலம் தமிழகத்திலுள்ள தஞ்சாவூர்  மாவட்டம் பட்டுகோட்டைலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலை என்ற ஊருக்குஅடுத்த பஸ் ஸ்டாப் விளாங்குளம் விளக்கு அங்கிருந்து 2 கி /மி வடக்கு சென்றால் விளாங்குளம் ஊர்  'அட்சயபுரீஸ்வரர்" ஆலயம் அமைந்துள்ளது.இத்தலத்தில்சனிபகவான் மந்த,ஜேஷ்ட,என்ற இரு மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதி பிருஹத் சனிஸ்வராக அருள் பாலிக்கிறார்   இங்கு சிவன் அட்சயபுரீஸ்வரராக உள்ளார் 

    

        பூசம்நட்சத்திரகரார்கள் தங்கள் நட்சத்திரதினம் மற்றும் திருதியை திதி நாட்களில் அங்குள்ள குளத்தில் நீராடிவிட்டு அங்குள்ள சனிஸ்வரரை எட்டு முறை சுற்றி வந்து அபிசேகம் செய்து  வழிபட்டால் உடல்நலக்குறைவு,கடன் பிரச்சனை,கால்சம்பந்தமான நோய்கள், மற்றும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும் என்பது ஐதீகம் முற்பிறவியில் செய்த கர்மவிமவினைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுவோமாக,,,,,,,,,!     

நன்றி யுணர்வுள்ள,,,,,,,!புனர்பூசம் நட்சத்திரகாரர்களே,,,,,,,,,!!

   வான்மண்டலத்தில் புனர்பூசம் நட்சத்திரமானது புதன் கிரகத்தின் ஆதிக்கமும் சந்திர கிரகத்தின் குணமும் கொண்ட ஒரு நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே நல்ல ஊக்கதிறன் கொண்ட நட்சத்திரமாகும்.

   

      புனர்பூசம்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் நன்றி உணர்வுடன் நடந்துகொள்வர்  தனக்கு உதவிசெய்தவரை போற்றி புகழும்குணம் இவர்களிடம் நிறைந்திருக்கும் மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்ல விரும்பமாட்டார்கள் கல்வியில்நல்ல மேன்மை கொண்டவராகவும் பேச்சு திறன் இவர்களிடம்இயற்கையாகவே  இருக்கும் ஏன் எனில் இராமபிரான் பிறந்த நட்சத்திரம் அதுமட்டுமல்ல காஷ்யப முனிவரின் மனைவிஆதிதி இன் நட்சத்திரதலத்தில்  மாதந்தோறும் விரதமிருந்து தேவர்களை பெற்றெடுத்தார்களாம்,

 

    இச்சிறப்புப் பெற்ற இந்த ஸ்தலம் தமிழகத்திலுள்ள வேலூர் மாவட்டம் வானியம்பாடி அருகிலுள்ள பழைய வானியம்பாடியில் 'அதிதீஸ்வரர்" ஆலயம் அமைந்துள்ளது.இத்தலத்தில்வாணியும் பிரம்மாவும் தங்கினார்கள் இதனால் சிவனும் பார்வதியும் மகிழ்ந்து வாணிக்கு அருள் செய்து வாணியை பாடும்படிகூறினார்கள்  வாணியும் பேசும் சக்தியை பெற்று இனிய குரலில் பாடினர்.இதன் காரனத்தினாலேயே இவ்வூர் வானியம்பாடி ஆனது. 

    

        புனர்பூசம்நட்சத்திரகரர்கள்  மேற்கு நோக்கிய இக்கோவிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு நோக்கிய கோவிலை வழிபட்டபலன் கிடக்கும் என்பது ஐதீகம் இத்தலத்தில் தட்சினாமூர்த்தி சின்முத்திரையுடன்  அமர்ந்து அருள் பாலிக்கிறார் இத்தளத்தில் வழிபட்டால் தானியவிருத்தி,குழந்தைகளுக்கு கல்வி விருத்தியாகும்இத்தலத்தில்ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் வியாபாரம் விருத்தியாகும்.   

Friday, 26 April 2013

வாய் சொல்லில்,,,,! வல்லவர்களாகதிகழும்,,,,!! திருவாதிரைநட்சத்திகாரர்களே,,,,,!!!

    வான்மண்டலத்தில் நாம்பார்க்க இருப்பது திருவாதிரைநட்சத்திரம்  இந்த நட்சத்திரம்  புதன் கிரகத்தின் முழு ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம் மற்ற நட்சத்திரத்தின் நண்பன் என்று கூட சொல்லாம் இன் நட்சத்திரம் மற்ற நட்சத்திரத்தின் நட்பை எளிதில் ஏற்படித்தி கொள்ளும் தன்மைகொண்ட நட்சத்திரமாகும்.

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாமர்த்தியமாக சம்பாதிக்கும் திறமைமிக்கவராகவும் அதை திட்டமிட்டுமுறையாக செலவழிக்க தெரிந்திருக்க கூடியவர்கள் 

வாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள் கலைகளில் ஈடுபாடு,சுப நிகழ்ச்சிகளில் முன்னின்று நடத்தும் தன்மையும் இவரிடம் உண்டு.ஏன்எனில் திருவாதிரை நட்சத்திர தலத்தில் பைரவமகரிஷி., ரைவமகரிஷி, ஆகியோர் இத்தலத்தில் அருவ ரூபத்தில் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

 இச்சிறப்புபெற்றஸ்தலம் தென்தமிழகம்தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைஅருகேயுள்ள அதிரமபட்டனத்தில் "அபய வரதீஸ்வரர்"எனும் பெயரில் அருள் பாலிக்கிறார் இத்தலத்தில்திருவாதிரை நட்சத்திரகாரர்கள் .

ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன்,,,,

ஆதிரை தானதில் அபயமென் றருளுவன்.....

ஆதிரை வதளைல்  ஆகிரும் ஆதியில்,,,

ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா,,,,,என்ற

பாடலைதிருவாதிரை நட்சதிரகாரர்கள்  "அபய வரதீஸ்வரர் முன் நின்று பாடினால் சிவனின் திருவருளும் ரைவ மகரிஷியின் அருளும் எளிதில் பெறலாம். 

      இத்தலத்திலுள்ள சிவன் சந்நிதியில் ஆயுள் ஹோமமும்,மிருதியஞஜய ஹோமமும் செய்தால் எமபயம் நீங்கி ஆயுள் விருத்தியாகும் மற்றும் திருமணதோஷம், இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன்கள் உடனே கிடைக்கும்   

 

Tuesday, 23 April 2013

தைரியத்தோடு,,,எதையும் எதிர்கொள்ளும் ,,,,,மிருகசீரிஷம்,,,நட்சத்திரகாரர்களே,,,,,!!

                             வான்மண்டலத்தில்       நாம்பாக்கஇருப்பதுமிருகசீரிஷம்நட்சத்திரம் இந்த நட்சத்திரம் வெள்ளி மற்றும்புதன்கிரகத்தின்ஆளுமையுடன்திகழும் ஒருநட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளும் ஆற்றலையும்பெற்றுள்ளது.
 
        இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாலமான புத்தியும் எளிதில்வெற்றிகொள்ளும் திறமைமிக்கவராகவும் செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் தான தர்மம் செய்யும் தன்மையும் மற்றவர்களை புரிந்துஅதற்கேற்பநடந்து கொள்ளும் இயல்பு இவர்களிடம் உண்டு.இவர்கள் பிறந்த நட்சத்திரதலத்தில் தினமும் மிருகண்டு மகரிஷி இத்தளத்தில்  உள்ள பெருமாளை அரூபா வடிவில் வழிபட்டு வருவதாக ஐதீகம் இத்தளத்தில் ஒரு முனிவரால் சாபம் பெற்ற அரசன் இத்தல பெருமாளை தரிசிக்க அவர் சாபம் பெற்ற சிங்கமுகம் நீங்கி பழைய முகம் கிடைத்தது இதன் காரணமாக இத்தளம் மிருகசீரிஷம் நட்சத்திரதலம் ஆனது.
      

        இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் தென்தமிழகத்திலுள்ள திருவாரூர்மாவட்டம்[தஞ்சைt o திருவாரூர்,செல்லும் வழியில்5௦கி /மீட்டரில்] முகூந்தனுர்  அருகிலுள்ள "எண்கண்' எனும் சிற்றூரில்'பிரயோக சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவியுடன்''  'ஆதி நாராயண பெருமாளாக" அருள் பாலிக்கிறார்.
         

       "மிருகசீரிஷம்" நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,புதன்கிழமை,சனிக்கிழமை பெருமாளுக்குதிருமஞ்சனம்[அபிசேகம்] செய்து வழிபட்டால் உங்கள் பிரச்சனைகள்உடனே தீரும்,குழந்தை பாக்கியம் வேண்டுவோர்,திருமணதடை உள்ளோர் படிப்புகேற்ற வேலை இல்லாதோர் அனைவரும் இத்தல பெருமாளை தரிசிக்க சகல நலமும் பெற்று நலமுடன் வாழலாம்,,,,,,!!   

         

Sunday, 21 April 2013

சொல்வாக்கும்,,,! செல்வாக்கும்,,,,!! பெற்றிருக்கும் ரோகினி நட்சத்திரககாரர்களே,,,,,,!!!

   வான்மண்டலத்தில் நாம் பார்க்க இருப்பது ரோகினி நட்சத்திரம் இந்த நட்சத்திரமானது வெள்ளியின்கிரகத்தின்  முழுமையான ஆளுமை திறன் கொண்டுள்ளது 

இந்த நட்சத்திரமானது ஞானசக்திகொண்டதாக உள்ளது.

  

     ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்றறிந்தவர்களிடம் நடப்பையும் விரும்புவர்கள்,கம்பீரமாக தோற்றம் போலியுடன் எப்போதும்காணப்படுவார்கள் இவர்கள்எப்போதும்வெளியூர்சென்றுகொண்டு இருப்பார்கள் கலைகளில்அதிகம்ஈடுபாடு இருக்கும் இவர்களுக்குமக்களிடத்தில் அதிகம்செல்வாக்கு உடையவர்களாக இருப்பார்கள்காரணம் இவர்களது நட்சத்திர தலத்தில் தினமும் ரோகினி தேவி வழிபட்டு செல்வதாக இதீகம்.

    இச்சிறப்புபெற்ற திருத்தலம் சென்னையைஅடுத்துகாஞ்சிபுரத்தில்ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் எதிரில் உள்ள ரோட்டில் சென்றால் சிறிது தூரத்தில்

 பாண்டவதூதா  பெருமாள் சன்னதி உள்ளது. இங்கு [கிருஷ்ணன்பாண்டவருக்கு தூது சென்றதால் ] "பாண்டவதூது பெருமாள்'"   25அடிஉயரத்தில்விஸ்வருபகாட்சியளிக்கிறார்.


  இத்தலத்திற்கு ரோகினி நட்சத்திரகாரரர்கள் அஷ்டமி திதி யன்றும் புதன்,சனிக்கிழமை,யன்றும் ரோகினி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் சகல நலன்களும் பெற்று வளமுடன் வாழலாம்,,,,,,!     

Friday, 19 April 2013

மென்மை மிகுந்த,,,,!கார்த்திகை நட்சத்திர காரர்களே,,,,,,!1

வான்மண்டலத்தில் கார்த்திகை நட்சத்திரம் செவ்வாய்,மற்றும் வெள்ளி கிரகத்தின் ஆதிக்கசக்தி பெற்றுள்ளது.இந்த நட்சத்திரம் மேன்மை மிகுந்தது இயற்கையாகவே மென்மையான நட்சத்திரம் ஆகும்
 

      கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வந்தராகவும்,திறமைமிக்கவரகவும்,அனுஷ்டனங்ககளில்பிடிப்புடன் திகழ்வார்கள் கலைகளில் ஆர்வமும் உண்டாகும் பெண்களிடத்தில் இயல்பாக பேசி பழகக்கூடியவர்வாழ்க்கைக்கு தேவையான பண்புகள் இயற்கையிலேயேபெற்றிருப்பர்கார்த்திகைநட்சத்திரதலத்தி ல்கார்த்திகேயன்[முருகன்] தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம் இவ்வளவு சிறப்புபெற்ற திருத்தலம் "காத்ரா சுந்தேரேசஸ்வரர்' ஆலயமாகும். 
      
       இத்தளம் தென்தமிழகம் நாகபட்டினம்மாவட்டம் கஞ்சாநகரம்[பொன் நகரம்] அமைந்துள்ளது இது மயிலாடுதுறை to பூம்புகார் செல்லும் வழியில்,8,கி/மி தொலைவில் உள்ளது. 
      
     கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரத்தன்றோ பிரதோஷ நாட்களில் இங்கு சென்று இக்கோவிலில் தீபமேற்றி வழிபட்டால் வாழ்கை மேன்மை அடையும். 

            திருமண தடை உள்ளவர்கள் இத்தல அம்மனுக்கு அபிசேகம் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் சுமங்கலி பூஜையும் செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். [சட்டநாதருக்குதனி சன்னதி உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது]
     
             கார்த்திகை நட்சத்திரகாரர்கள்  இத்தலத்திற்கு நட்சத்திர நாளில் மாதமாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது அல்லது வாழ்நாளில் ஒருமுறையாவதுசென்றுவந்தால் சகல நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ்வோமாக......!.    

Wednesday, 17 April 2013

"வெற்றி "கொள்ளும் திறன் படைத்த,,,,,, பரணி நட்சத்திரகாரர்களே,,,,,,,!!

 வான்மண்டலத்தில் பரணி நட்சத்திரமானது செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கநிலையில் வீட்டிருக்கும் நட்சத்திரமாகும் இதன்தாக்கம் எதையும் திறன்பட வழிநடத்தும் வல்லமை கொண்ட நட்சத்திரம்."பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வார்" என்பது இந்த நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு பொருந்தும்.
        இவர்கள் எதையும் தாங்கும் இதயமும்,எதையும் எளிதில் வெற்றிகொள்ளும்  தன்மையும் இயற்கையாகவே அமையபெற்றவர்கள் இவர்ளுடைய வாழ்வு முன்னேற்றமுடையதாகவே
இருக்கும் ஏன்னா அதிஷ்ட தேவதைகள்அருள் கிடைக்க பெற்ற நட்சத்திரமாதாளால் தான  தர்மம் செய்யும் இயல்பு இவர்களுக்கு உண்டு.
        இதன் நட்சத்திர ஸ்தலம் மூன்றுபக்கங்கள் கோபுரத்துடன் கூடியா  வாசல்கள் உள்ளன இத்தலத்தில் சிவனே நவகிரக நாயகனாகவும்,  அக்னி சொருபமாக வீட்டிருப்ப்பதாலும்
"அக்னீஸ்வரர்" என்று அழைக்கப்படுகிறது இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஸ்தலம்.
   
      தமிழ்நாட்டிலுள்ள நாகபட்டின மாவட்டம் நல்லாடை எனும் ஊரில்அமைந்துள்ளது.இவ்வூர் மயிலாடுதுறை to காரைக்கால் வழியில் நல்லாடை எனும் திருச்தலம் உள்ளது 

 பரணி நட்சத்திரகாரர்கள் அவரவர் நட்சதிரம்வரும் நாளில் இங்கு சென்று ஹோமம் செய்தால் நாம்செய்த கர்ம வினைகள் நீங்கி வாழ்வில் வளம்பெறுவோமாக,,,,,!  

Sunday, 14 April 2013

நல்ல,,,விஷயங்களை,,போதிக்கும் ,,,,,அஸ்வினி நட்சத்திரகாரர்களே,,,,,,,!!


    வான் மண்டலத்தில் அஸ்வினி நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம்கொண்டுள்ளது இதுசெந்நிற நட்சத்திரமாகும்."நோயில்லாத வாழ்வு குறையில்லாத செல்வத்திற்கு சமம்"
 எனும் பழமொழி இந்த நட்சத்திரகாரருக்கு பொருந்தும்

நீங்களே சொல்லகேட்டுஇருப்பீர்கள் மச்சி எனக்கு அடிபட்டு உடம்பு எல்லாம் காயம் ஆனா நான்எந்தமருந்தும் போடலே ஆன காயம் எல்லாம்  நாலு நாள்லே கான்சுபோச்சு ஏனஇந்தநட்சத்திரகாரர்கள் இயற்கிலேயே மருத்துவ நிவாரண தன்மை பெற்றவர்கள்
    அஸ்வினி நட்சத்திரகாரருக்குஒரு 'சிறப்பு வாயிந்த திருத்தலம்" தென்தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பஸ்நிலையத்தில் இருந்து 1 கி /மி தொலைவில்  "பிறவி மருந்தீஸ்வரர்" உள்ளது. இத்தில் தினத்தினம் மருத்துவதேவதைகள் வழிபாடு செய்யக்கூடிய திருதலம்.
   நீங்கள் இத்தளத்தில்செவ்வாய் பகவான் வழிபாடு,தன்வந்தரி ஹோமம்செய்தால் காலமெல்லாம் நோயில்லாத வாழ்வு அமையும் இங்கு நீங்கள் மாதமாதம் உங்கள் நட்சத்திர நாளில்.அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது,அல்லது உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்றுவந்தால் நீங்கள் முற்பிறவியில் செய்த கர்மவினைகள் நீங்கி வாழ்வில் வளம்பெறவீர்கள்,,,,,,,!    
  

Thursday, 11 April 2013

நட்சத்திர ஜன்னலில்,,,,,வானம் ,,,எட்டிபாக்குது,,,,,!!

  குழந்தை பிறந்த உடனே ஆணா,பெண்ணா,இதைத்தான்பாக்கிறோம்!இதைபார்த்துவிட்டு உடனே பிறந்த நேரத்தை எடுத்துகொண்டு ஒரு நல்ல ஜோசியரை பார்த்து  குழந்தைக்கு என்ன ராசி,என்ன நட்சத்திரம் என்றுதான் கேக்கிறோம்!
அந்த அளவுக்கு ராசி நட்சத்திரம் முக்கிய பங்கு வகுக்கிறது, அனைவராலும் நம்பக்கூடிய விஷயம்தான் ஏற்றுகொள்ள கூடிய விஷயம்தான். ஏற்று கொள்ளப்பட்ட விஷயம் தான் ஆனால் அதை முழுமையா தெரிந்து கொண்டால் இன்னும் நம்மவாழ்க்கைசெம்மையகிவிடும்அல்லவாதெரிந்துகொள்ளுங்கள்.


  

         சூரியனுக்கும்,நட்சத்திரங்களுக்கும் மட்டுமே இயற்கையான ஒளி உண்டு கிரகங்களே சூரியனிடமிருந்து தான் ஒளியை பெற்று பிரதிபளிக்கிறது அவற்றிற்கு இயற்கை ஒளிகிடையாது.
எனவே கிரகங்களைவிட நட்சத்திரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.இந்தநட்சத்திரம் ஆனது மனித வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது வானில் எத்தனையோ நட்சத்திரங்கள் அத்தனைக்கும் துருவ நட்சத்திரமாக விளங்குவது,   அஸ்வினி ,.பரணி, கார்த்திகை,ரோகினி,மிருகசீரிஷம்,திருவாதிரை,புனர்பூசம்,பூசம்ஆயில்யம்,மகம்,பூரம்,உத்திரம்,ஹஸ்தம்,சித்திரை,ஸ்வாதி,விசாகம்,அனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்திராடம்,திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி,போன்ற இந்த இருபத்தி ஏழு நட்சத்திரங்கள்தான் மிகமுக்கியமானதாக கருதப்படுகிறது,  
   எந்த ராசியில் பிறந்தாலும் எந்தநட்சத்திரத்தில் பிறந்தாலும் மனிதனுக்கு ஏற்ற தாழ்வு இருந்துகொண்டேதான்இருக்கிறதுஇந்தசூழ்நிலையில் வாழ்கையில் முன்னேறவும், நிம்மதி பெறவும்,  இறைவனை நாடித்தான்செல்கிறோம் இதற்காகத்தான் நம் முன்னோர்கள் கோவில் குளங்களை அமைத்துள்ளார்கள்.
    இக் கோவில்களுக்கு சென்று வருவதின் மூலம் நம் குறைகள் நீங்கி"நல்ல பலன்" கிடைக்கும் என்ற நம்பிக்கைள் சென்றுகொண்டு இருக்கிறோம்.   

அதனால் தான் மக்களை அதிகம் அலையவிட கூடாது என்பதிற்காக ஒவ்வொரு நட்சத்திரகாரருக்கும் ஒரு கோவிலை அமைத்துள்ளார்கள் அதை பற்றி நாம் அடுத்த பதிவில் பார்ப்போம்.     


Tuesday, 9 April 2013

கொடுப்பதில் கொடைவள்ளல்,,,!கெடுப்பதில்,,,? ராகு கேது,,,,?

  வானமண்டலத்தில் இராகுவும் கேதுவும் கிரகணங்கள் ஏற்படுத்தும் கிரகங்கள்ஆகும்.இது நாகங்களாக இராகு கேது மக்களின் சடங்குகளிலும்,புனித நாட்களையும்   காட்டும்கிரகங்களாகவேபரிணமித்துள்ளது.
     இந்த இராகு கேதுதானது சூரியன்,சந்திரன்,பூமி ஆகியவற்றின் இயக்கத்தின்     நிழல்களுடன் தொடர்பு கொள்ள செய்யப்பட்டுஅவை "

        சாயா" கிரகங்கள் என அழைக்கப்படுகிறது.        இராகு கேது தோஷம் உடையவர்கள் ஆந்திரமாநிலம் காளஹஸ்த்தி சென்றுநிவர்த்திசெய்யலாம்.
          அங்கு செல்லமுடியதவர்கள் உங்கள் ஊரின் அருகில் உள்ள பாம்பு புற்று  உள்ள கோவிலுக்கு சென்றும் இராகு கேது தோஷ நிவர்த்திசெய்துகொள்ளலாம்,,,,,,,. 

Sunday, 7 April 2013

நாட்டாமே,,,,தீர்ப்பே,,,,,,மாத்தி,,,,சொல்லு,,,,,சனி,,,?

  சூரியனில் இருந்து  ஆறாவதாக அமைந்துள்ளஒரு கோள் இது வான்மண்டலத்தில்  இரண்டாவது பெரியகோளாகும்  வளி அரக்க கோள்களில் நான்கில் சனியும் ஒன்றாகும்.சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால்    முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒரு சில தனிமங்களால் சிறிய அளவிலும்  நிரப்பப்பட்டுள்ளது.
      இது பாறை மற்றும் பனிக்கட்டிகளால் ஆனா சிறிய உள்ளகமும்   அதை சுற்றி தடிமனான உலோக ஐதரசன் அடுக்கும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது.சனியின் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம் அதாவது       1800கி /மணி வரையும் இருக்ககூடும் சனிகிரக வளையங்கள் ஒரு குறிப்பிடத்தக்க கிரகமா விளங்குகிறது சனியின் கருநீல கதிர்கள் அதிகமாக வெளிப்படும் இடம்
         தமிழ்நாடு புதுசேரி அருகிலுள்ள காரைக்கால் toபேரளம் செல்லும் வழியில் திருநள்ளாறு எனும் திருத்தலம் உள்ளது.இத்தலத்தில் ஒரு நாள் தங்கி அங்குள்ள சனிஸ்வரனை  வழிபட்டால் சனியின் கருநில கதிர்களால் ஏழரை சனி ,அஷ்டமசனி ,அர்த்தஷ்டமா சனி .   விலகி வாழ்வில் வளம் பெறுவோமாக,,,,,,என




Saturday, 6 April 2013

வெள்ளி சிரிப்புடன்,,,!கொண்டகலைமகள்,,,,!!வெள்ளி,,,!!!


       சூரியனிலிருந்து இரண்டவதாக அமைந்துள்ளது "வெள்ளி" கோள்   ஆகும்.இரவுவானத்தில்நிலவும்வெள்ளியேபிரகாசமானதுசூரியஉதயத்திற்குமுன்னும் சூர்யா அஸ்தமத்திற்கு பின்னும் வெள்ளி தன் உச்ச பிரகாசத்தை அடைகிறது
 அதனால்அதுகாலைநட்சத்திரம்மற்றும்மாலைநட்சத்திரம் என்றுஅழைக்கப்படுகிறது.மிகவும் வெப்பமான வளி மண்டலத்தை கொண்ட கோள்வெள்ளிஆகுமஅதிகரித்துபச்சைவிட்டுவால்விளைவால்ஏற்பட்டதாகும்இதன்சூழல்உயிரனங்கள்வாழமுடியாததாககொண்டுள்ளதுஇதுபுவிபோலகோலத்தைகொண்டகோளாகும்.இதை "புவியின் தங்கை" என்றும் அழைக்கப்படுகிறது.
   
        இந்த "வெள்ளி ' கோளின் வெளிப்பாடு கொண்ட ஸ்தலம் தான் சுக்கிரன் ஸ்தலம் எனப்படும் திருவரங்கம்இந்த தளத்ததை 11ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.இதியாவில் மிகப்பெரியஇராஜகோரம்கொண்டஇக்கோவில்21கோபுரங்கள்,7சுற்றுபிரகரங்க  ளும் உள்ளன.                                                                                                                                                               
       இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஸ்தலம் திருச்சி அருகே உள்ள 'ஸ்ரீரங்கம்" தான்.  சுக்கிரதிசை,சுக்கிரபுத்தி,நடப்பவர்கள் இங்கு ஒரு முறை சென்று வாழ்வில் சகலநலன்களும் பெற்று வாழ்வில் வளம்பெறுவீர்,,,,,,,,,,,என.    

 

  

Friday, 5 April 2013

பாடறியே,,,,,!படிப்பறியே,,,,,,!! வியாழன்,,,நீ ,,,அறியே,,,,!!!

        சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள வான்மண்டலத்திலேயே  மிகப்பெரிய கோள்  "வியாழன்' ஆகும்.   மற்ற கோள்கள் போல் அல்லாது             புறக்கோள்களில் ஒன்றான வியாழன் சூரியனை போல் வாயுக்கள் திரண்ட கோளம், சூடான பாறையும் திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும் மேல் தளத்தில் திரட்சியான திடப்பொருள் எதுவும் கிடையாது.பூமி தன்னைதானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் ஆகும் பொழுது பிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9,50 மணி நேரத்தில் அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாக   தன்னைதானே சுற்றி விடுகிறது.சூரியனை சுற்றும்    வியாழன் பூமியின் விட்டத்தைபோல் 11 மடங்கு விட்டத்தை கொண்டது.வியாழனை சுற்றி மெல்லிய வளைய தொகுதி உள்ளது.மிக வலிமையான       காந்தபுலம் உள்ளது.இந்த வியாழனின் காந்தபுலம் அபரிவிதமாய் வெளிப்படும் இடம்.தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே அமைந்துள்ள ஆலங்குடிதான்   இங்கு உள்ள குரு தட்சினமூர்த்தியை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று நலமுடன் வாழ ,,,,,,,,,,,,,,,

Tuesday, 2 April 2013

அறிவார்ந்த சாதனையில் ,,,,,!புதன்,,,,,!!

                                                                                                                                                                                 

        வாண்மண்டலத்தில்  சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன் ஆகும்.  
இது சூரியனிலிருந்து  0.4.வானியல் அலகுதூரத்தில் உள்ளது,இது மிக சிறிய
கிரகம் ஆகும்.இதற்கு துணைக்கோள் கிடையாது.
      இதன் புவியமைப்பு அம்சங்களின் பெயர்பெற்றதாகும்.அழுத்தமான எரிமலை    வாய்களில் தொங்குகூடல் வாய்கள் அமைந்துள்ளன.அவைகள்சரித்திர  முதல்தோற்ற காலத்தில் நிகழ்ந்து ஒடுக்கத்தால் உருவாகி இருக்கலாம் .
     வெளிப்பகுதி அடுக்குகள் ராட்சத பயன் விளைவால் களையப்பட்டு சூரியனின் எரிசக்தி திரண்டு உருவாவதை தடுத்து வந்துகொண்டுள்ளது.இந்த"புதன்" கிரகத்தின் சக்தியின் வெளிப்பாடு.
       தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை அருகிலுள்ள 
'திருவெண்காடு' இதன் சிறப்பு ஸ்தலம் ஆகும்.

                                  



"