'"லக்கணமே" வாழ்க்கையின்,, இலக்கணம்,,,,,,!!!
ஜாதகத்தில் :ல " என்று போடப்பட்ட வீடுதான் முதல் வீடு எனப்படும்அதாவது லக்கணம் எனப்படும் உதாரணம் சிம்மம் தான் முதல் வீடு என்றால் கன்னி 2 வது வீடு ஆகும்இப்படியே என்னிக்கொண்டுவந்தால் 12வது வீடு கடகம் ஒவ்வொரு வீட்டுக்கும் சில காரதுவம் உண்டு அதை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
முதல் வீடு ;இதைவைத்து ஜாதகருடைய நிறம்,உருவம் ,உயரம் குனதிசியங்கள் முதலியவற்றை அறியலாம் ஜாதகர் ஒல்லியானவர இல்லைகுண்டானவர கோபம் உள்ளவரா,இல்லை சாந்தமானவர என்றும் அறியலாம்.அவர் வாழ்கையில் உயர்த்த நிலைக்கு போவரா,தாழ்ந்த நிலைக்கு போவாரா என்பதை தெரிந்து கொள்ளலாம்
இரண்டாம் வீடு; இது குடுப்பத்தை குறிக்கிறது பணவரவு ,செலவு,போன்ற பொருளாதாரத்தையும் குறிக்கிறது அதை தவிர நகைகள்வெள்ளிப்பாத்திரங்கள்சொத்துக்கள் ஆடை அணிகலன்களையும் இந்த வீட்டை வைத்து கூறலாம். இரண்டாம் வீட்டை வாக்குஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. ஒருவர் கனிவாக பேசுவாரா அல்லது கடினமாக பேசுவாரா ,திக்கி திக்கி பேசுவாரா என்பதை சொல்லலாம் கண்ணாடி அணிபவர இல்லையா என்பதையும் கூறலாம்.
மூன்றாம் வீடு;இந்த வீட்டை கொண்டு ஒருவரின் இளய சகோதரம்,தைரியம்பயணம்,தகவல்,வீடுமாறுதல்ஆகியவற்றையும்இந்த வீட்டை வைத்து கூறலாம். உடல் பாகங்களில் காதுகள்,தொண்டை.கைகள்,நரம்புமண்டலம் ஆகியவையும் கூறலாம் இந்த வீட்டை தைரியஸ்தானம் என்று கூறுவர்.
நான்காம்வீடு; இது தாயாரைகுறிக்கும் வீடு, கல்லூரி வரையிலானபடிப்பு,வீடுவாசல்போன்றசொத்துக்கள்,கால்நடைகள்,விளைநிலங்கள்,அதிலிருந்து கிடைக்கும் தானியங்கள் ஆகியவற்றையும் குறிக்கிறது
ஐந்தாம்வீடு; இதை புத்திர ஸ்தானம் என்று அழைப்பார்கள் இதை பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கலாம். அதாவது இதை பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கலாம். அதாவது போன ஜென்மத்தில் ஒருவர் நல்லது செய்தவர இல்லையா என்று எந்தவீட்டை கொண்டு முடிவு செய்யலாம். ஒருவருக்கு குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா என்றும் முடிவு செய்யலாம் கலைத்துறை,சினிமா,டிராமா,லாட்டரி,குதிரைபந்தையம்,காதலித்து திருமணம் செய்தவரா இல்லையா ஆண்மீகவாழ்கை வேதம் மந்திரங்கள் ஆகியவற்றை கூறலாம்.
ஆறாம்வீடு ; தாய்மாமன்,வேலை செய்யும் இடம், கவலைகள்,கடன்கள்.வியாதிகள்,உண்ணும் உணவு ஆகியவற்றை எல்லாம் இந்த ஆறாம் வீட்டை வைத்து கூறலாம்.
ஏலாம்வீடு; இந்தவீடு திருமணம், வியாபாரம், பிரயாணம்,மரணம் ஆகியவற்றையும் குறிக்கும் வீடு இந்த ஏலாம் வீட்டை வைத்து கூறலாம்.
எட்டாம் வீடு ;ஒருவரின் ஆயுளை குறிக்கும் வீடு இதுதான். பிதுர்ரார்ஜித சொத்துக்கள் உயில்கள்,இன்சுரன்ஸ் போனஸ்,ஆகியவைகளை குறிக்கும் வீடு இதுதான் ஒருவரின் மரணம் இயற்கையானதா துர்மரணமா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம் துன்பம்,துக்கம்,தோல்வி தண்டனை தடைகள் ஜெயில் தண்டனை இவைகளையும் அறியும் வீடு இதுதான் இந்த வீட்டை :"துஸ்தானம்"என்று கூறுவார்கள்.
ஒன்பதாம்வீடு; தகப்பனார் ,போன ஜென்மத்தில்ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள்,பாவங்கள்,நீண்ட பயணம்,தெய்வ தரிசனம்,செய்தால் உயர்கல்வி முன்பின் தெரியாதவர்கள்,ஆகியவற்றை குறிப்பது இந்த வீடுதான்.
பத்தாம்வீடு;ஒருவரின் ஜீவனம், கெளரவம் சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை இந்தவீட்டை கொண்டுதான் சொல்லலாம் தொழிலில் முன்னேற்றம்,பதவி உயர்வு அரசியல் ஆகியவற்றையும்இதை கொண்டேதான் சொல்லலாம் இதை "கர்மஸ்தானம்" என்றும் கூறுவார்கள் தயார்,தகப்பனுக்கு செய்யும் கர்ம காரியங்களையும் இந்தவீட்டை கொண்டு சொல்லலாம்.
பதினொன்றாம் வீடு;இதை "லாபஸ்தானம்"என்றுகூறுவார்கள் நமக்கு வரகூடிய லாபங்களையும்,சுகங்களையும் அளிக்க கூடியது மூத்தசகோதர்களை பற்றியும் எந்தவீட்டை வைத்து கூறலாம்..நண்பர்களையும், வாழ்கையில் என்ன மிச்சம் என்பதையும் இந்த வீட்டை வைத்துதான் கூறலாம்.
பணிரண்டாம்வீடு ;இதை "மோட்ச ஸ்தானம்" என்றும்,"விரைய' ஸ்தானம் என்றும் கூறலாம் நமக்கு வரக்கூடிய செலவுகள்,நஷ்டங்கள்,எல்லா வற்றையும் கூறலாம். துன்பம் பாவம்,வறுமை,துரதிஷ்டம்,மறைமுக எதிரிகள்,ஜெயில்வாசம்.கடன்திருப்பிகொடுப்பதையும்,முதலீடு செய்வதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம்.
சரி நண்பர்களே,,,,,,!இதுவரை லக்கண காரதுவத்தை பார்த்தோம் இனி வரும் பதிவுகளில் மேஷம் முதல் மீனம் வரையிலான லக்கனபலன்களை
விரிவாக பார்ப்போம்,,,,,
.
No comments:
Post a Comment