துலாம்லக்னம்,,,,,!!!

துலாம் லக்கினத்தில் ஜென்மம் எடுத்த நீங்கள் தடித்த சரீரம் தெய்வ வழிபாட்டில் ஆச பாசங்கள்,மனகுழப்பங்கள் நீங்கும் சொல்வன்மையினால் எல்லோரையும் கவரும் சக்தியுடையராகவும்,சான்றோர்களுக்கு மரியாதை செலுத்துவராகவும்,நிர்வாக துறையில் ஆலோசனை
குழுவில் தனி சிறப்புபெற்றவராகவும் விளங்குவீர்கள். சொல்லிலும்,செயலிலும் நீதி நேர்மை வெளிப்படும். சிறந்த பதவிகளையும்,செல்வாக்கையும் பெற்று வாழும்
உயர்ந்த மனிதராக விளங்குவீர்கள். கள்ளம் கபடம் இல்லாத வாழ்க்கை நடத்தி இன்புற்று வாழ்வீர். நீச்சல்போட்டி,படகுபோட்டி,போன்ற
விளையட்டுக்களிலும் நாட்டமுடையவர்கள் நீங்கள். உங்களுக்கு பிறக்கும் ஆண் மக்கள் கடின உழைப்பளியாகவும். விடாமுயர்சி உடையவராகவும்
இருப்பர் நீதி நேர்மை கடைபிடித்து புகழ் அடைவீர்கள்.
பெண்களிடத்தில் சொத்து சம்பந்தமான குழப்பங்கள், நெருங்கிய நண்பர்களின் வெறுப்பு இவைஉண்டாகும் எனவே கண்ணியத்துடன் செயல்படவேண்டும்
ஆகாரத்தில் கட்டுபாடு இல்லாமையும் சுரப்பிகளின் கேடுகளால் அஜீரணம், வாயிற்று நோய் போன்றவற்றை உண்டாக்கலாம், தண்ணீர் பந்தல்
,நந்தவனம் போன்றவற்றை அமைக்க ஆவல் உள்ளவர்.வெளிநாட்டுப்பயணம் அணுகூலம் ஏற்படும் கண்ணிராசி 1 2 ஆம் வீடாக அமையபெற்றதால்
பெண்களிடத்தில் நெருங்கி பழகுவீர்கள். கச்சேரி,கல்யாணம் என்று பணத்தை விரயம் செய்வர்கள்
உங்கள் லக்கினமானது அதனுடைய இடத்தின் 3 வது திரிகோணத்தில் அமைந்திருப்பதால் தாங்கள் பொருளாதாரத்தை பொறுத்தவரை
அதிஷ்டகாரர்.தாங்கள் ஹோட்டல் தொழிலில் மேன்மையடைவீர்கள் தாங்கள் சங்கீதம்,நுண்கலைகள் ஆகியவற்றில் கவரபடுவீர்கள் தங்களின்
ஆரம்பகால கடினமானதாக இருக்கும்,ஆனால் தங்கள் நிலையினிலும் திடீரென்று பதவி உயர்வோ அல்லது முன்நேற்றமோ ஏற்படும்.
வாழ்கையில் 16, 18, 23, 25, 27, 32, 39, 46, 53, முக்கியமான வருடங்கள்,,,,,.
No comments:
Post a Comment