மிகுந்ததந்திரபுத்தியுடைய ""உத்திராடம்" "நட்சத்திரகாரர்களே,,,,,,,!!!

வான்மண்டலத்தில் உத்திராடம் நட்சத்திரம் வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற கோளாகும் இந்த நட்சத்திரமானது மிகுந்த தந்திரம் கொண்ட நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்திருதால், கடமைப்பற்றுடன் கீழ்ப்படிந்தும், நல்ல குணம் படைத்தவராகவும், பல நண்பர்களைக் கொண்டவராகவும் நன்றியுடையவராகவும், அன்புள்ளம் நிறைந்தவராகவும் இருப்பதுடன், உங்களுக்கு கிடைத்த உதவிக்கு நன்றிக் கடனும் , மிகுந்த தந்திர புத்தியுடைய சாமர்த்தியசாலியாகவும், முயற்சியில் வெற்றி காண்பவராகவும் விளங்குவார்கள். இவர்களுக்கு பல செல்வந்தர்களைத் தெரிந்திருக்கும் இவர்கள் முதலாளிகள் மதித்து மதிப்புக் கொடுப்பார்கள். இசையிலும் நடனத்திலும் இவர்களுக்கு அபார ஆசை இருக்கும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகிலுள்ள பூங்குடி இவ்வூர் சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 12 கிலோமீட்டர்தூரத்தில் ஒக்கூர்அதிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் கீழப்பூங்குடி உள்ளது. இங்குதான் சிவன் பிரம்ம புரீஸ்வரராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர தினத்தில் மற்றும் பவுர்ணமி சித்திரை பிறப்பன்றும் சிறப்பு பூஜை நடைபெறும்.திருமண தடை உள்ளவர்கள்,இங்குள்ள மீனாட்சிஅம்மனை வணங்கிவழிபட்டு வந்தால் திருமண தடை நீங்கி வாழ்வில் வளம் பெறலாம்.
No comments:
Post a Comment