தெய்வபக்தி" மேலோங்கி நிற்கும்,,,! பூச நட்சத்திரகாரர்களே,!!
வான்மண்டலத்தில் பூசம் நட்சத்திரமானது சந்திர கிரகத்தின் ஆதிக்கமும் குணமும் கொண்ட ஒரு நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது சந்திரனின் முழுமையான ஆதிக்கம் பெற்றுப்பதால் இயற்கையாகவே நல்ல மென்மையுடன்எதிர்கொண்டு வெற்றிகொள்ளும்தன்மை கொண்ட நட்சத்திரமாகும்.

பூசம்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் பெரியவர்களிடத்தில் மரியாதையும்,மனதில் எப்போதும் தெய்வபக்தி மேலோங்கியும்,கவலைகளை மறந்து சிரிக்கும் பண்பையும் எடுத்தசெயலை வெற்றியோடு முடிக்கும் வைராக்கியமும் எப்போதும் புகழோடு வாழும் வல்லமையும் பெற்றுருப்பார்கள் மென்மையானகுணமும் இவர்களிடம்இயற்கையாகவே இருக்கும் ஏன் எனில்பூசம்நட்சத்திரத்தில்வசிக்கும் பூசமருங்கர் எனும் சித்தர் சூர்யலோகத்திற்கும் பித்ரு லோகத்திற்கும் தினமும் சென்று வரும் அரியசக்தியுடைய 'பித்ருசாய்"எனும் காக்கைகளுக்கு சற்குரு வாகவிளங்கும் இவர் இத்தலத்தில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம்.
இச்சிறப்புப் பெற்ற இந்த ஸ்தலம் தமிழகத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டைலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலை என்ற ஊருக்குஅடுத்த பஸ் ஸ்டாப் விளாங்குளம் விளக்கு அங்கிருந்து 2 கி /மி வடக்கு சென்றால் விளாங்குளம் ஊர் 'அட்சயபுரீஸ்வரர்" ஆலயம் அமைந்துள்ளது.இத்தலத்தில்சனிபகவான் மந்த,ஜேஷ்ட,என்ற இரு மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதி பிருஹத் சனிஸ்வராக அருள் பாலிக்கிறார் இங்கு சிவன் அட்சயபுரீஸ்வரராக உள்ளார்
பூசம்நட்சத்திரகரார்கள் தங்கள் நட்சத்திரதினம் மற்றும் திருதியை திதி நாட்களில் அங்குள்ள குளத்தில் நீராடிவிட்டு அங்குள்ள சனிஸ்வரரை எட்டு முறை சுற்றி வந்து அபிசேகம் செய்து வழிபட்டால் உடல்நலக்குறைவு,கடன் பிரச்சனை,கால்சம்பந்தமான நோய்கள், மற்றும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும் என்பது ஐதீகம் முற்பிறவியில் செய்த கர்மவிமவினைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுவோமாக,,,,,,,,,!
No comments:
Post a Comment